அண்மைய செய்திகள்

recent
-

200 ஓட்டங்களுக்களுக்கு மேல் சேஸ் செய்து சென்னை சாதனை -


பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் டோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 24-வது லீக் போட்டியில் டோனி தலைமயிலான சென்னை அணியும், கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்ன அணி முதலி பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக குயின்டான் டி காக், விராட் கோஹ்லி ஆகியோர் களமிறங்கினர்.

கோஹ்லி 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த டி வில்லியர்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.
முதலில் பொறுமையாக விளையாடி வந்த டி காக், அதன்பின் அதிரடியாக விளையாட தொடங்கினார். டிவில்லியர்ஸ் - டி காக் ஜோடி சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டது.
சிறப்பாக விளையாடிய இரண்டு வீரர்களும் அரைசதம் கடந்தனர். டி காக் 37 பந்தில் 53 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் எடுத்தது. அவரைத்தொடர்ந்து டி வில்லியர்ஸ் 30 பந்தில் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டிவில்லியர்ஸ் அவுட் ஆன அடுத்த பந்திலேயே, கோரி ஆண்டர்சன் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்களையும் இம்ரான் தாஹிர் வீழ்த்தினார்.

இறுதியில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். அவர் 17 பந்தில் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் குவித்தது.
சென்னை அணி சார்பில் சர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், டேவைன் பிராவோ தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
அதன் பின் 206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர்களாக வாட்சன், ராயுடு களமிறங்கினர்.

வாட்சன் 7 ஓட்டங்களிலும், அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 11, பில்லிங்ஸ் 9 என அடுத்தடுத்து வெளியேறியதால் சென்ன அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இருப்பினும் துவக்க வீரராக களமிறங்கி ஒன் மேன் ஆர்மியாக போராடிக் கொண்டிருந்த ராயுடுவுக்கு, இவர்களைத் தொடர்ந்து வந்த டோனி சிறப்பாக ஆடினார்.

இவர்கள் இருவரும் பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் சென்ன அணியின் ரன் விகிதமும் ஜெட் வேகத்தில் எகிறியது.
சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக 82 ஓட்டங்களில் ரன் அவுட் ஆகி வெளியேறியதால், ஆட்டம் பரபரப்பை எட்டியது.

ராயுடு வெளியேறினாலும், டோனி தன்னுடைய அதிரடியை காட்டினார். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் என்ற போது, பிராவோ பவுண்டரி, ஒரு ஓட்டம் என எடுக்க, நான்காவது பந்தை எதிர்கொண்ட டோனி சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

சமீபகாலமாக டோனியின் ஆட்டம் குறித்து பலரும் விமர்ச்சனங்கள் கூறி வந்த நிலையில், டோனியின் இன்றைய ஆட்டம் அவருடைய பழைய பினிஷிங் திறமையை காட்டியுள்ளது.
இப்போட்டியில் 34 பந்துகளை சந்தித்த டோனி 70 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். இதில் 7 சிக்ஸர் 1 பவுண்டரிகள் அடங்கும்.

மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சென்ன அணி, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது 202 ஓட்டங்களையும், தற்போது 205 ஓட்டங்களையும் சென்னை அணி சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது.


200 ஓட்டங்களுக்களுக்கு மேல் சேஸ் செய்து சென்னை சாதனை - Reviewed by Author on April 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.