அண்மைய செய்திகள்

recent
-

விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துவிட்டு கனடா சென்ற பெண் பலி -


கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இலங்கை பெண் ஒருவர் உள்ளடங்குவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.
கடந்த 24ஆம் திகதி ரொரான்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 46 வயதான ரேனுகா அமரசிங்க என்ற இலங்கை பெண் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் இலங்கையின் ஹொரண, குடாஉடுவ, கரவ்ஹேன பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் ஆவார்.
இந்நிலையில் சகோதரியின் மரணம் தொடர்பில் இலங்கையிலுள்ள சகோதரர் ஊடகங்களுக்கு தகவல் அறிவித்துள்ளார்,
“நான் 1991ஆம் குவைத் நாட்டிற்கு தொழிலுக்கு சென்றார். 1994ஆம் ஆண்டு எனது மனைவியும், ரேனுகாவும் குவைத்திற்கு வரவழைத்தேன். நான் பணிபுரிந்த இடத்தின் உரிமையாளர் கனடாவுக்கு செல்லும் போது 2001ஆம் ஆண்டு எனது சகோதரியையும் அழைத்துச் சென்றார்.
கடனாவில் 5 வருடங்கள் தங்கியிருந்த பின்னர் அவருக்கு குடியுரிமை கிடைத்தது. சகோதரி திருமணம் செய்த பின்னர் ரொரன்டோவில் இருந்து வேறு பிரதேசத்திற்கு சென்றார்.

சகோதரிக்கு 7 வயதில் மகன் ஒருவர் உள்ளார். எனது சகோதரியும் மகனும் புத்தாண்டை முன்னிட்டு இலங்கைக்கு வந்திருந்தனர். 3 வாரங்கள் வரை எங்களுடன் இருந்து விட்டு கடந்த 17ஆம் திகதி கனடாவுக்கு சென்றார்.
கனடாவுக்கு சென்று 7 நாட்களில் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மகனை பாடசாலைக்கு அழைத்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பும் போது இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இதற்கு முதல் மூன்றரை வருடங்களுக்கு முன்னரே அவர் இலங்கைக்கு வருகைத்தந்திருந்தார். இந்த முறையில் புத்தாணடிற்கு வந்தவர் அம்மாவையும் பார்த்து விட்டு, காலில் இருந்த பிரச்சினை ஒன்றுக்கு சிகிச்சையும் பெற்று கொண்டார்.
அவர் கனடா குடியுரிமை பெற்றவர். இதனால் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது குறித்து உரிய பதில் ஒன்று வழங்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலில் ரேனுகா அமரசிங்க உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துவிட்டு கனடா சென்ற பெண் பலி - Reviewed by Author on April 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.