அண்மைய செய்திகள்

recent
-

சிவனின் பல்வேறு வடிவங்கள் பற்றி


பெரும்பாலும் கோயில்களில் லிங்க வடிவில் தான் அருள்பாலிப்பார் சிவபெருமான், சில கோயில்களில் விஷேச வடிவங்களில் அவர் காட்சி தந்து அருள்புரிகிறார்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த வடிவங்கள் பற்றியும் கோயில் குறித்தும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
  • நஞ்சுண்ட நீலகண்டன் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் நிலையில் காசியில் உள்ள அனுமன் காட்டிலும் ஆந்திராவில் உள்ள சுருட்டப்பள்ளியிலும் அருள் பாலிக்கிறார்.
  • மூன்று கால்களுடன் இறைவன் காணப்படுவதால் ஜ்வாரகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரம் மற்றும் வேலூர் கோட்டையில் இவரின் இந்த உருவத்தை தரிசிக்க முடியும்.
  • சிவன் லேசாக வலப் புறம் சாய்ந்திருக்கும் வடிவத்தில் கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.
  • காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் இறைவன் எட்டு திருக்கரங்களுடன் காணப்படுகிறார்.

  • பிருங்கி மகரிஷி வண்டு வடிவில் வந்து சிவலிங்கத்தை துளைத்து வழிபட்டதால் அந்த வண்டு துளைத்த அடையாளத் தோடு சிவலிங்கம் இருக்கும் இடம் திருநல்லூர் ஆகும். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.
  • காசி, காஞ்சி கைலாசநாதர் கோயில், நேபாளம், காளஹஸ்தி, திருவானைக்காவல், சித்தேஸ்வர் மஹாதேவ் , ராசிபுரம் ஆகிய இடங்களில் சிவன் ஐந்து முகமுடன் காட்சியளிக்கிறார்.

  • சிவன் நெய் மலையாகவே காட்சி தரும் இடம் ஒன்று உள்ளது. ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கம் கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ளது.
  • நண்டு ஒன்று சிவபெருமானின் மேல் பக்தியோடு வழிபட்டதால் சிவலிங்கத்தின் மேல் பாகத்தில் நண்டு குடைந்த அடையாளத்துடன் இறைவன் அருட்சோமநாதர் என்கிற பெயரில் நீடூர் எனும் ஊரில் அருள் புரிந்து வருகிறார்.
  • மானும் மழுவும் ஏந்தும் சிவனின் திருக்கை திருசக்கிரம் ஏந்திய கோலத்தில் உற்சவமூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இக்கோயில் மயிலாடுதுறையில் உள்ள திருவிற்குடியில் உள்ளது. இங்கு இறைவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
  • 32 இதழ்களை உடைய ஆவுடையாரில் சுயம்பாக எழுந்தருளியுள்ள லிங்கம் சொர்ணபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் செம்பனார் கோயில் என அழைக்கப்படுகிறது.
  • ரத்தினகிரியில் உள்ள வேந்தன் ஒருவனை இறைவன் சோதனை செய்த போது அந்த வேந்தனின் வாள் பட்ட தழும்புடன் இறைவன் காட்சி தருகிறான். இந்த இறைவனுக்கு ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர்.

  • குங்குமத்தால் ஆன சிவலிங்கம் மகாராஷ்டிர மாநிலம் குஸ்மேசம் எனும் பகுதியில் இருக்கிறது.
  • பாஞ்சன்ய சங்கை சிவனை வழிபட்டு பெற்றுக் கொண்டார் பெருமாள். அந்த வழிபாடு நடந்த இடத்தியிலேயே சங்காரண்யேஸ்வரர் இறைவன் அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோயில் தலைச்சங்காட்டில் உள்ளது.
  • விஷ்ணு கோயில்களில் மட்டும் வைக்கப்படும் சடாரி எனும் சம்பிரதாயம் மூன்று சிவன் கோயில்களிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. அவை காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் , காளஹஸ்தி மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில்கள் ஆகும்.
  • திருவிஜயமங்கலத்தில் அர்ஜுனனின் அம்பு பட்ட லிங்கம் இருக்கிறது. இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்கிற பெயரில் அருள்பாலிக்கிறார்.
  • சுயம்புலிங்கம் ஒன்றின் மேற்புறம் பலாப்பழத்தின் மேற்புறம் போல முட்களாக காணப்படுகிறது. இந்தக் கோயில் தஞ்சையில் உள்ள குடவாசல் அருகே உள்ளது. இங்குள்ள இறைவனின் பெயர் பிலாசவனேஸ்வரர்.
  • தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் மூன்று முகம் கொண்ட அர்த்தநாரீஸ்வரராக இறைவன் அருள் பாலிக்கிறார்.
  • சந்திரன் போலவே 15 நாட்கள் வளர்ந்தும் 15 நாட்கள் தேய்ந்தும் லிங்க வடிவில் அருள்பாலித்து வருகிறார் சிவன் . பிரசித்தி பெற்ற அமர்நாத் கோயிலில் தான் இத்தகைய சிவலிங்கம் உள்ளது.

சிவனின் பல்வேறு வடிவங்கள் பற்றி Reviewed by Author on April 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.