அண்மைய செய்திகள்

recent
-

128 வயது வரை உயிர் வாழும் மூதாட்டியின் வாழ்க்கையில் உள்ள சோகம்:


உலகில் அதிக வயது காலம் வாழ்ந்த நபர் என்றால் பிரான்ஸைச் சேர்ந்த Jeanne Calment(122 வயது) தான், சுமார் 122 ஆண்டுகள் 164 நாட்கள் வாழ்ந்த இவர் 1997-ஆம் ஆண்டு இறந்தார்.

இப்படி உலகின் அதிக வயதுடைய நபர் இவர் தான் என்று நாம் பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் போது, செசன்யாவைச் சேர்ந்த Koku Istambulova 128 வயதும் தற்போது வாழ்ந்திருக்கும் இவர் செசன்யா நாட்டைச் சேர்ந்தவர்.
ரஷ்ய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருக்கும் இவர் 1889-ஆம் ஆண்டு ஜுன் 1-ஆம் திகதி பிறந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு நாட்கள் கூட மகிழ்ச்சியாக இல்லை.
அதுமட்டுமின்றி என்னுடைய வாழ்நாட்கள் மிகக் கடுமையானவை, தொடர்ந்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டே இருப்பேன், இதனால் மிகவும் சோர்வாக இருப்பேன்.
என்னுடைய இந்த நீண்ட நாள் வாழ்க்கை கடவுள் கொடுத்த வரம் தான், ஆனால் நான் அதை எனக்கு கொடுத்த தண்டனையாக நினைக்கிறேன்.

என்னுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்து பார்த்தால் அதில் ஒரு மகிழ்ச்சி கூட இல்லை, நான் இளமையிலே இறந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, இழுத்து கொண்டிருக்கிறேன் என்றே கூறலாம்.
Koku Istambulova-வின் குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். இவருடைய மகள் Tamara தன்னுடைய 104-வயதில் கடந்த ஆண்டு தான் மரணமடைந்தார்.
மேலும் Koku Istambulova கூறுகையில், என்னுடைய இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு நான் எதையும் பின்பற்றவில்லை, மாமிசம் மற்றும் சூப் சாப்பிடாததே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

நான் நிறைய மக்களை தற்போது பார்க்கிறேன், அவர்கள் ஆரோக்கியத்திற்காக விளையாட்டு, டையட், போன்றவைகளை எல்லாம் பின்பற்றுகின்றனர்.
ஆனால் நான் அப்படி இல்லை, நான் எப்படி இவ்வளவு வயது வரை இருக்கிறேன் என்பதே தெரியவில்லை.
ரஷ்யாவின் சிவில் போர், இரண்டாம் உலகப் போர், இரண்டு செச்சன்யா போர் போன்றவைகளை பார்த்துள்ளேன்.
என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி என்றால் கோடை காலத்தில் எனக்கு பிடித்த இடத்தில் உட்கார்ந்திருப்பதே என்று கூறியுள்ளார்.




128 வயது வரை உயிர் வாழும் மூதாட்டியின் வாழ்க்கையில் உள்ள சோகம்: Reviewed by Author on May 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.