அண்மைய செய்திகள்

recent
-

பூங்காவனம் 32 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம் -கலாபூஷனம் எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை


கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 32 ஆவது இதழ் வெளிவந்திருக்கின்றது. பிரபல பெண் எழுத்தாளர் திருமதி. ஆனந்தி அவர்களது முன் அட்டைப் படத்தைத் தாங்கி வந்திருக்கும் இவ்விதழில் அவர் பற்றிய நேர்காணலை ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்கள் நேர்கண்டு திருமதி. ஆனந்தியைப் பற்றிய தகவல்களைத் தந்திருக்கின்றார்.

ஆசிரியர் தலையங்கம் சந்தா பற்றி பேசியிருக்கின்றது. ஒரு சஞ்சிகையின் உயிர்நாடி அதன் சந்தாதாரர்களின் கையிலும், தரமான எழுத்தாளர்களின் கையிலும் தங்கியிருக்கிறது. ஏனெனில் வாசகர்களின் - சந்தாதார்களின் தரமான எழுத்தாளர்களின் கையிலும்தான் தங்கியிருக்கின்றது. ஏனெனில் வாசகர்களின் - சந்தாதாரர்களின் உதவியின்றி சஞ்சிகை ஒன்று நெடுநாள் பயணம் மேற்கொள்வது இயலாத காரியம். ஏனெனில் சஞ்சிகையை நடத்திச் செல்வதற்கு நிதி மூலதனம் அவசியத்திலும் அவசியம்.

மேலும் இதழில் கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதை, கட்டுரைகள், நூல் மதிப்பீடு போன்ற இலக்கியத் தளங்களில் படைப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன. சுமார் 27 இதழ்களில் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் எழுதிவந்த இலக்கிய அனுபவ அலசல் 32 ஆவது இதழுடன் முற்றுப் பெறுகின்றது. அதேபோன்று கா. விசயரத்தினம் அவர்கள் எழுதிவந்த கட்டுரைகளும் ஏக காலத்திலே முற்று பெற்றுவிட்டது. இருவரும் மீளாத்துயில் கொண்டு எழுத்துலகுக்கு விடைகொடுத்துவிட்டார்கள்.

நூல் மதிப்பீட்டில் ஆ. முல்லை திவ்யனின் 'தாய் நிலம்' என்ற நூலுக்கான மதிப்புரையை ரிம்ஸா முஹம்மத் எழுதியிருக்கிறார். எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, மிகிந்தலை ஏ. பாரிஸ், சந்திரன் விவேகரன், நல்லையா சந்திரசேகரன், பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரி, எம்.ஜே.எம். சுஐப், அஸாத் எம். ஹனிபா, அப்துல் ஹலீம், பதுளை பாஹிரா, வெலிப்பன்னை அத்தாஸ், நுஸ்கி இக்பால் ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

கா. தவபாலனின் குறுங்கதையும், இக்ராம் எம். தாஹா, சூசை எட்வேட், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரது சிறுகதைகளும், நூலகப் பூங்காவில் அண்மையில் வெளிவந்த சில நூல்கள் பற்றிய அறிமுகங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தத்தில் பூங்காவனத்தின் 32 ஆவது இதழ் பல்சுவை அம்சங்கள் நிறையப் பெற்ற ஒரு சஞ்சிகையாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது!!!

சஞ்சிகை         - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு         - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி    - 0775009222
விலை             - 100 ரூபாய்

பூங்காவனம் 32 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம் -கலாபூஷனம் எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை Reviewed by Author on May 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.