அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாதிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிப்பு....


ஈரானில் 18 பேர் கொல்லப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய 8 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து டெக்ரான் இஸ்லாமிய புரட்சிகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரான் பாராளுமன்றம் மீது ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதிகள் குழு ஒன்று கடந்த ஆண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியது.
இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஈரானில் ஐ.எஸ் பயயங்கரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

குறித்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள இஸ்லாமிய புரட்சிகர நீதிமன்றம் 7 அமர்வுகளாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் அளித்துள்ள மனு மீதான விசாரணை பின்னர் மேற்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஈரான், ஷியா பிரிவினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு. அங்கு சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை ஒடுக்க ராணுவத்தை ஈரான் அரசு பயன்படுத்துகிறது. இதனால் ஈரான் அரசு மீது அவர்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தலைநகர் டெக்ரானில் உள்ள பாராளுமன்றத்திற்குள் கடந்த ஆண்டு ஜூன் மாதம், 4 பேர் கைத்துப்பாக்கிகளையும், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளையும் ஏந்தியவாறு, அதிரடியாக நுழைந்தனர்.
அங்கு அவர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி விட்டு, பாராளுமன்றத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள நவீன ஈரானின் நிறுவனரான அயத்துல்லா கொமேனியின் நினைவிடத்திலும் தாக்குதல் நடத்தினர்.

இவ்விரு தாக்குதல்களிலும் 18 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.
இந்த தாக்குதல்களில் தொடர்பு உடைய 8 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து டெக்ரான் இஸ்லாமிய புரட்சிகர நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
தண்டிக்கப்பட்ட பயங்கரவாதிகள் இந்த தண்டனையை எதிர்த்து அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
இந்த வழக்கில் இன்னும் 18 பேர் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிப்பு.... Reviewed by Author on May 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.