அண்மைய செய்திகள்

recent
-

நாங்கள் மக்களின் நலன் கருதி மீண்டும் ஒன்றாகவே பயணிக்க விரும்புகின்றோம்-EPRLFகட்சியின் மாவட்ட அமைப்பாளர் S.R.குமரேஸ்-(photo,voice)

ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு  ஆயுத போராட்ட காலத்திலும் சரி, ஜனநாயக வழி போராட்ட காலத்திலும் சரி எந்தவொரு கூட்டாக இருந்தாலும் குறிப்பாக அந்த கூட்டில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியவை இல்லாத கூட்டு என்பது இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தில் இருந்ததில்லை என மன்னார் நகர சபை உறுப்பினரும்,ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)   தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகள் , பொது மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் நேற்று (6)  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

'ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில்' ஆயுதம் ஏந்திய காலத்திலும் சரி,ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு ஜனநாயக அரசியலுக்கு வந்த காலத்திலும் சரி இந்த ஒற்றுமை, சமாதானம்,கூட்டு என்ற விடையத்தில் இங்கே பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இப்படியான கூட்டுக்கள், சமாதானங்கள் என பேசி இவ்வாறான கூட்டுக்கள் வந்துள்ளது.

ஆனால் உண்மையிலேயே அந்த கூட்டுக்கள் எல்லாமே ஒரு இதய சுத்தியோடு இந்த மக்களின் விடுதலையை அடைவதற்கான ஒரு கூட்டுக்களாக இருந்ததா? ஏன்பது ஒரு கேள்வியாக இருக்கின்றது.

ஆனால் உண்மையிலேயே கடந்த ஆயுதம் ஏந்திய அந்த காலப்பகுதியில் ஆயுதம் வைத்திருந்தமைக்கான கூட்டு என்பது உண்மையிலேயே ஒரு இதயச் சுத்தியோடு ஏற்படுத்தப்பட்ட கூட்டாகவே நாங்கள் கருதுகின்றோம்.

ஆனால் இன்றைக்கு இருக்கின்ற கூட்டு என்பது வெறுமனமே கதிரைகளை அலங்கரிக்கும் கூட்டுக்களாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

நாங்கள் மட்டுமல்ல மக்கள் மத்தியில் அப்படியான ஒரு என்னம் எழுந்துள்ளமையினை நாங்கள் அவதானித்துக்கொண்டோம்.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு  ஆயுத போராட்ட காலத்திலும் சரி,ஜனநாயக வழி போராட்ட காலத்திலும் சரி எந்தவொரு கூட்டாக இருந்தாலும் குறிப்பாக அந்த கூட்டில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியவை இல்லாத கூட்டு என்பது இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தில் இருந்ததில்லை.

எந்தவொரு கால கட்டத்திலும் நாங்கள் ஒன்றாக இருந்திருக்கின்றோம்.

இறுதியாக நடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலை தவிர கூட்டு என்று வந்த அதிகமான தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப்.மற்றும் ரெலோ ஆகியவை ஒன்றாகவே பயணித்துள்ளது.

நாங்கள் மக்களின் நலன் கருதி மீண்டும் ஒன்றாகவே பயணிக்க விரும்புகின்றோம்.

தலைவர் சிறி சபாரத்தினம்   அதற்காகவே பல தியாகங்களை செய்திருக்கின்றார்.அப்படியான தலைவர்களின் வழியில் வந்தவர்கலே நாங்கள்.

வெறுமனே வாயளவில் சமாதானம்,கூட்டு என்று பேசிக்கொண்டிருக்காமல் ஆயுதம் துக்கிய போராளிகள் என்பதற்காக நாம் அதனை செய்ய முடியாது.

-உண்மையான இலக்கை நோக்கி உண்மையான கூட்டை நோக்கி,உண்மையான சமாதானத்தை நோக்கி எப்போது நாம் கரம் கோர்த்து ஒன்றாக வலுவாக செயல்படுகின்றோமோ அப்போதே இந்த சிறந்த தலைவர்கள்,போராளிகளின் கனவை நாங்கள் நிறை வேற்ற முடியும்.

அதுவே இவர்களுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.அதற்கான உறுதிப்பாட்டை இந்த இடத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.என்பதனை கூறிக்கொள்ளுகின்றேன்.என மேலும் தெரிவித்hர்.
-மன்னார் நிருபர்-

நாங்கள் மக்களின் நலன் கருதி மீண்டும் ஒன்றாகவே பயணிக்க விரும்புகின்றோம்-EPRLFகட்சியின் மாவட்ட அமைப்பாளர் S.R.குமரேஸ்-(photo,voice) Reviewed by Author on May 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.