அண்மைய செய்திகள்

recent
-

யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிக்க கொழும்பிலிருந்து ஏற்பாடு

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு கொழும்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக தெரியவருகின்றது.

இதற்கு பல்வேறு தரப்பின ரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இனவிடுதலை போராட்டத்தில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக் களின் நினைவாக யாழ்.பல்கலையில்  மாணவர்களின் முயற்சியில் ஆரம்பிக்
கப்பட்ட \'முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி\" அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட மைக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல உயி ர்கள் காவுகொள்ளப்பட்டன. அதில் யாழ்.பல் கலையில் கல்வி கற்கும் மாணவர்களின் உறவுகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே தமது உறவுகளை நினைவு கூரும் முகமாக வும் எதிர்காலத்தில் இது ஒரு வரலாற்று ஆவணமாகவும் அமைவதை நோக்கமாக கொண்டு பல்கலை வளாகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவு தூபியை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினர் அமைக்கும் பணிகளை ஆரம்பித்தனர்.

தூபி அமைக்கும் பணிகள் நிறைவடை யும் நிலையில் பல்கலை நிர்வாகத்தினால் குறித்த தூபி அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துமாறு மாணவர்களுக்கு அறிவிக்கப்ப ட்டது.

யாழ்.பல்கலை வளாகத்தின் மத்தியில் அமைக்கப்படும் இந்த நினைவு தூபியானது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்க ளின் வலிகளையும் துன்பங்களையும் பிரதி பலிக்கக்கூடியதாக அமையவுள்ள நிலையில் இதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு மதகுரு க்கள் புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புக்கள் என பலதரப்பட்ட பிரிவினரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தூபி அமைக்கப்பட்டு நிறைவுபெறும் தறுவாயில் அதை தடுத்து நிறுத்தி மாணவ ர்களின் மனநிலையை விரக்திக்கு உட்படுத் தும் செயற்பாடாக இது ஏற்பட்டுள்ளதுடன் இன அழிப்பின் ஒரு அடையாளமாக இதை அமைக்கும் பணிகளை முடக்குவதற்கு அரசு திட்டமிட்டே இந்த தடையை விதித்துள்ளது என புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த தூபி அமைக்கும் விடயம் தொடர்பில் முன்னின்று செயற்படும் மாணவர்களுக்கு தொடர்ச்சியான விசாரணைகள் புலனாய்வுத்துறையினரால் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிக்க கொழும்பிலிருந்து ஏற்பாடு Reviewed by Author on May 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.