அண்மைய செய்திகள்

recent
-

டிரம்புடன் விளையாட வேண்டாம்: வடகொரிய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா -


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடன் விளையாட வேண்டாம் என அந்நாட்டின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வடகொரிய ஜனாதிபதி கிம்மை எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பில், அணு ஆயுத அழிப்புக்கு வடகொரிய ஜனாதிபதி ஒப்புக் கொள்ள வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.

மேலும், கிம் அதனை ஏற்கவில்லை என்றால் லிபியா ஜனாதிபதி கடாபிக்கு ஏற்பட்ட நிலைதான் கிம்மிற்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ஜனாதிபதி டிரம்புடன் விளையாட வேண்டாம் என கிம் ஜாங் உன்-ஐ எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அடுத்த மாதம் நடைபெறும் கிம் - டிரம்ப் சந்திப்பில் வடகொரிய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் விளையாட வேண்டாம்.
அவ்வாறு செய்தால், அது அவருடைய பெரிய தவறாக இருக்கும். தவறு ஏதேனும் நடந்தால் அமெரிக்கா - வடகொரியா இடையே நடைபெறும் உச்சி மாநாட்டிலிருந்து டிரம்ப் வெளியேறுவார்’ என தெரிவித்துள்ளார்.


GETTY IMAGES

டிரம்புடன் விளையாட வேண்டாம்: வடகொரிய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா - Reviewed by Author on May 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.