அண்மைய செய்திகள்

recent
-

ஈராயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த“தூங்கும் அழகியை” கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் -


சைபீரியாவின் தென் பகுதியில் சுமார் 2,000 வருடங்கள் பழமைவாய்ந்த மம்மி ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இளம் பெண் ஒருவரின் மம்மியாக இது இருக்கலாம் என அவர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இதற்கு “தூங்கும் அழகி” (Sleeping Beauty) எனவும் பெயரிட்டுள்ளனர்.
Yenisei ஆற்றுப் பகுதியில் உள்ள புதைகுழியினுள் பட்டுநூல்கள் மற்றும் பாத்திரங்கள் சூழ இந்த மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீன நாட்டு தயாரிப்பிலான கண்ணாடி ஒன்றும் பெட்டிக்குள் காணப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.
அதேவேளை இந்த உடலம் முழுமையாக மம்மியாக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் மம்மியாக்கப்பட்டிருந்த நிலையில் நீர் அரிப்புக்கள் காரணமாக உருக்குலைத்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஈராயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த“தூங்கும் அழகியை” கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் - Reviewed by Author on June 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.