அண்மைய செய்திகள்

recent
-

சிறையில் இருந்த பிரபல நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல் நலக் குறைவு! -


சிறையில் இருந்த பிரபல திரைப்பட நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் பொலிசார் பாதுக்காப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் 8 வழிச் சாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன் என்று பிரபல நடிகர் மன்சூர் அலிகான் கூறியதால், அவரை சேலம் மாவட்ட பொலிசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த அவர் 8 வழிச் சாலை அமைப்பது குறித்து உண்ணாவிரதம் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சிறையில் இருந்த அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

அப்போது பேசிய அவர், எனக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் சேலம் விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படவுள்ள பகுதிகளை பார்வையிட சென்ற நடிகர் மன்சூர் அலிகான் அப்போது பொதுமக்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் 8 வழிச் சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன் என்று கூறியதன் காரணமாகவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் இருந்த பிரபல நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல் நலக் குறைவு! - Reviewed by Author on June 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.