அண்மைய செய்திகள்

recent
-

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ’டை’ ஆன போட்டி -


நெதர்லாந்தில் நடைபெற்ற அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி டையில் முடிவடைந்துள்ளதால், டி20 வரலாற்றிலேயே டையில் முடிந்த போட்டியாக இது பதிவாகியுள்ளது.
ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் அயர்லாந்து-ஸ்காட்லாந்து அணிகள் நேற்று மோதின. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் கோயட்சர் 54 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய அயர்லாந்து அணியும், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் பால் ஸ்டெர்லிங் 81 ஓட்டங்கள் குவித்தார்.


AFP



Getty Images

இதனால் இந்தப் போட்டி எந்த அணிக்கும் வெற்றி, தோல்வியின்றி டையில் முடிவடைந்தது. கடந்த ஆண்டு நாக்-அவுட் போட்டிகளில் மட்டுமே 'Super Over'முறையை பயன்படுத்த வேண்டும் என்று ஐ.சி.சி கூறியிருந்தது.
எனவே, இந்த போட்டியின் முடிவு அறிவிக்கப்படாமல் டை ஆனது. இதன்மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே டையில் முடிவடைந்த போட்டியாக இந்தப் போட்டி அமைந்துள்ளது.
இதற்கு முன்பு 9 டி20 போட்டிகள் டையில் முடிவடைந்துள்ளன. ஆனால் அந்த போட்டிகளில் Bowl Out அல்லது Super Over முறை பயன்படுத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ’டை’ ஆன போட்டி - Reviewed by Author on June 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.