அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் வரலாற்று தீவுக்குள் நடக்கும் சோகம் -


புத்தளம் மாவட்ட கரையோர மக்கள் குடிநீர் இன்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்பிட்டி எல்லை தீபகற்பத்தில் உள்ள பத்தலங்குண்டுவ தீவில் வாழும் மக்களுக்கு குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பத்தலங்குண்டுவ தீவு என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளம் கொண்ட தீவாகும். அதன் அழகை வார்த்தைகளில் கூற முடியாமல் வாழ்ந்த மக்கள் இன்று வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளனர்.
பத்தலங்குண்டுவ தீவில் சுமார் 1700 மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். எனினும் சுத்தமான குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். மணல் கலந்த நீரை பருகி வருகின்றனர்.

கடற்கரைகளுக்கு அருகில் குழி தோண்டி நீர் பெறும் இந்த மக்கள், குடம் ஒன்றில் நீர் நிரப்ப கிட்டத்தட்ட அரை மணித்தியால நேரத்தை செலவிடுகின்றனர்.
சில அடி ஆழமான குழி தோண்டி, மணல் வருவதனை தடுத்து இந்த நீரை பெற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் வரலாற்று தீவுக்குள் நடக்கும் சோகம் - Reviewed by Author on June 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.