அண்மைய செய்திகள்

recent
-

20 பேர் பலி, பலர் காயம் -இரவு விடுதியில் வெடித்த வெடிகுண்டு:


வெனிசுலா நாட்டில் பரபரப்பு மிகுந்த இரவு விடுதி ஒன்றில் கண்ணீர்புகை குண்டு வெடித்ததில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி மரணமடைந்த பெரும்பாலானவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், பட்டமளிப்பு விழா முடித்து விடுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

மட்டுமின்றி சம்பவம் நடந்தபோது அந்த இரவு விடுதியில் சுமார் 500 பேர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும்,
திடீரென்று கண்ணீர் புகைகுண்டு வெடித்ததில் உயிர் தப்பும் அவசரத்தில் பலர் முந்திச் சென்றதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில் சிக்கி பலர் மரணமடைந்துள்ளனர். 11 பேர் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளதாக உள்விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த இரவு விடுதியை மூடியுள்ளதாகவும், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதிக்குள் எவ்வாறு கூச்சலுக்கு இடையே சண்டை மூண்டது எனவும், பொலிஸ் அல்லது ராணுவம் பயன்படுத்தும் கண்ணீர் புகைகுண்டு எவ்வாறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விடுதியில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் வெனிசுலா நாட்டில் வன்முறைக்கு சுமார் 27,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த Caracas பகுதியில் மட்டும் கடந்த ஓராண்டில் 104 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் அரசு சாராத அமைப்புகளின் பொய்யான தகவல் இதுவென ஜனாதிபதி Nicolás Maduro தலைமையிலான அரசு விளக்கமளித்துள்ளது.



20 பேர் பலி, பலர் காயம் -இரவு விடுதியில் வெடித்த வெடிகுண்டு: Reviewed by Author on June 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.