அண்மைய செய்திகள்

recent
-

கோடிகளை கொட்டும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டு: முழு விவரங்கள் -


பணமழை பொழியும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடர்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோ உச்சத்தில் இருக்கிறது.
உலகம் முழுவதிலும் இருந்து உலகக்கோப்பை 32 கால்பந்து அணிகள் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளன.

போட்டியை நடத்துவதற்கு பல்வேறு நாடுகளிடையே கடுமையான போட்டி இருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வது பெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன் (பிபா) ஆகும்.

தற்போது ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டிகளுக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏறக்குறைய ஆறு லட்சம் பேர் ரஷ்யாவிற்கு வருவார்கள் என்பது விளையாட்டு ஏற்பாட்டாளரான பிபாவின் கணிப்பு.
2002 கால்பந்து உலகக்கோப்பை போட்டியை நடத்திய ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் கிடைத்த வருமானம் கிட்டத்தட்ட 900 கோடி அமெரிக்க டொலர்கள்.
2006 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திய ஜேர்மனி 1200 கோடி டொலர்களையும், 2010ஆம் ஆண்டு போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்கா 500 கோடி டொலர்களையும் ஈட்டின.

தற்போதைய கால்பந்து உலகக்கோப்பை போட்டி ஏற்பாடுகளுக்காக ரஷ்யா சுமார் 1,100 கோடி டொலர்களை செலவு செய்திருக்கிறது. அது எதிர்பார்க்கும் லாபம் 3,000 கோடி.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யும் பிபா போட்டி நடத்தும் நாட்டைவிட அதிக வருவாய் ஈட்டுகிறது. பிபாவுக்கு மொத்தம் 53 பில்லியன் 40 கோடி டாலர்கள் அளவுக்கு வருமானம் கிடைக்குமாம்! ஆனால் இந்த வருமானத்தில் பெரும்பகுதியை, பரிசாகவும், ஊக்கத் தொகையாகவும் பிபா கொடுத்துவிடுகிறது.
இந்த ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பிபா கொடுக்கப்போகும் பரிசுத்தொகை இதோ,
வெற்றி பெறும் அணி-சுமார் 2 பில்லியன் 56 கோடி ரூபாய்
இரண்டாவது இடம் பெறும் அணி - 1 பில்லியன் 89 கோடி ரூபாய்
மூன்றாவது இடம் பெறும் அணி - 1 பில்லியன் 62 கோடி ரூபாய்

கோடிகளை கொட்டும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டு: முழு விவரங்கள் - Reviewed by Author on June 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.