அண்மைய செய்திகள்

recent
-

ஈழத்தைச் சேர்ந்த யுவதி கனடாவில் உயரிய சாதனை -


கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் என்ற யுவதி பெற்று சாதனைப்படைத்துள்ளார்.

தமிழ் ஈழ இனத்தில் உச்சமாக சாதிப்பவர்கள் சிலர். அதிலும் அதீத சமூக அக்கறை கொண்டு அதன் செயற்பாடுகளை தமது மூச்சாகக் கொண்டு அதேவேளை துறைசார்நது தமது கல்வியிலும் உச்சமாக சாதிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அச்சாதனையூடாகவும் தமது இனத்திற்கும் அதன் வாழ்விற்கும் வலுச்சேர்ப்பவர்கள் பெருமை சேர்ப்பவர்கள் அபூர்வமானவர்களே!

இவ்வாறான இளையவரே அபிசா யோகரத்தினம். தனது முதற்பட்டப்படிப்பில் முதன்மை தேர்ச்சி பெற்று அதனூடாக மருத்துவக்கல்விக்கான வாய்ப்பை ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் பெற்று அதன் முதல் ஆண்டிலேயே மீண்டும் முதன்மை நிலையை எய்தி அதியுயர் விருதைப் பெற்றுள்ளார்.
அது மட்டுமல்ல தனது ஆராச்சிகளினூடாக ரொரன்ரோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய யூனிவசிற்றி கெல்த் நெற்வேக் எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டைப் பெற்று அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் தனதாக்கியுள்ளார்.

சமூக நிகழ்வு எங்கென்றாலும் தனது பிரசன்னத்தை மட்டுமல்ல, அதன் பிரதான செயற்பாட்டாளராகவும் காணப்படும் அபிசா அடுத்த தலைமுறைக்கான சிறந்த முதன்மை வழிகாட்டி மட்டுமல்ல இனத்தின் ஒரு பெரும் நம்பிக்கை நட்சத்திரம். இளையவர்களின் இவ்வாறான வளர்ச்சியும், எழுச்சியும், சாதனைகளும் ஈழத் தமிழினத்திற்கான பெரும் ஊக்கமருந்து என குறிப்பிடப்படுகின்றது.

ஈழத்தைச் சேர்ந்த யுவதி கனடாவில் உயரிய சாதனை - Reviewed by Author on June 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.