அண்மைய செய்திகள்

recent
-

இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! மலச்சிக்கல் வருமாம் -


சரியான நேரத்தில் உணவு சாப்பிடாதது மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
ஒருசிலருக்கு மலச்சிக்கல் அதிகமாகி மலம் கழிக்கும் வேளையில் வலியை ஏற்படுத்துவதுடன் இரத்தக்கசிவும் கூட ஏற்படலாம்.
எனவே மலச்சிக்கலை உண்டாக்கும் காரணிகள் குறித்து பார்க்கலாம்.
வலி நிவாரணிகள்
வலி நிவாரண மாத்திரைகளின் பயன்பாட்டை நிச்சயம் குறைத்தாக வேண்டும், இவற்றை உட்கொள்ளும் போது உங்களது செரிமான பாதையை அடைத்து கழிவுகள் வெளியேறுவதை நிறுத்திவிடும்.
அவசர தேவைக்காக மட்டுமின்றி அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்ப்பது நன்று.
சிப்ஸ் மற்றும் பொரித்த உணவுகள்
மலச்சிக்கலை உண்டாக்குவதில் முக்கிய பங்கு சிப்ஸ்க்கு உண்டு, அதிகளவில் உட்கொள்ளும் போது செரிமான நேரம் அதிகரிக்கும்.
இதேபோன்று பிரெஞ்சு பிரைஸ், வெங்காய பக்கோடா போன்ற பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள்
சீஸ், பால் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகமாக உட்கொண்டால் செரிமான பிரச்சனைக்கு ஆபத்தை உண்டாக்குகிறது, ஏனெனில் இதில் நார்ச்சத்தும் குறைவாகவே உள்ளது.
பிஸ்கட்
இதேபோன்று பிஸ்கட், குக்கீஸ் மற்றும் கேக் போன்றவற்றில் அதிக கொழுப்பு அடங்கியுள்ளதாக அதிகளவு உட்கொள்வது உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இதுதவிர நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது, தண்ணீர் குறைவாகக் குடிப்பது, காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.
மேலும் வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்ற காரணங்களாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! மலச்சிக்கல் வருமாம் - Reviewed by Author on June 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.