அண்மைய செய்திகள்

recent
-

உங்கள் கண்கள் அடிக்கடி இப்படி சிவந்து இருக்கா?


காலையில் தூங்கி விழிக்கும்போது சில நேரம் கண்கள் சிவப்பாக காட்சியளிக்கும்.
கண்களில் உள்ள இரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கம் அல்லது எரிச்சல் இதற்கான காரணமாக இருக்கலாம்.
சிவந்த கண்களுக்கான இயற்கை தீர்வுகள் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
  • பன்னீர் தேவைகேற்ப
  • காட்டன் பஞ்சு சிறிதளவு
செய்முறை:
பஞ்சை பன்னீரில் நனைக்கவும். நனைத்த பஞ்சை கண்களின் மேல் பகுதியில் வைக்கவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். தினமும் இரண்டு முறை இதனை செய்யலாம்.
பன்னீரில் உள்ள மிருதுவான தன்மை மற்றும் நெகிழ்வு தன்மை, கண்களில் நல்ல தீர்வைப் பெற உதவுகிறது. பன்னீரின் அழற்சி எதிர்ப்பு தன்மை, வீக்கத்தை குறைத்து, எரிச்சலைப் போக்குகிறது.
தேவையான பொருட்கள்
  • கற்றாழை ஜெல்
  • தண்ணீர்
  • பஞ்சு
செய்முறை:
கற்றாழை ஜெல்லுடன் சம அளவு தண்ணீர் விட்டு ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். ஒரு மணி நேரம் இந்த கலவையை பிரிட்ஜில் வைக்கவும். பிறகு அந்த கலவையில் பஞ்சை நனைத்து கண்களில் வைக்கவும். அரை மணி நேரம் அப்படி விடவும். பிறகு நீரால் கண்களைக் கழுவவும். தினமும் ஒரு முறை இதனை செய்து வரலாம்.
கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு தன்மை உள்ளது. இது கண்களை இதமாக்கி எரிச்சலைப் போக்குகிறது.


உங்கள் கண்கள் அடிக்கடி இப்படி சிவந்து இருக்கா? Reviewed by Author on June 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.