அண்மைய செய்திகள்

recent
-

நுண்கடனால் புண்படும் பெண்கள்...வேடிக்கை பார்க்கும் கண்கள்....

இலங்கையின் வடமாகாணத்தில் வறுமை மிகுந்த முதலாவது மாவட்டமாக முல்லைத்தீவும் 03வது மாவட்டமாக மன்னாரும் 05வது மாவட்டமாக கிளிநொச்சியும்  உள்ளது.வறுமையில் இருக்கும் போதே....

இலங்கையின் வடக்கு-கிழக்கில் முப்பது வருட காலமாக நீடித்த யுத்தத்தினால் சீரழிந்து போன தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் மக்களின் மீதி வாழ்வை இன்று நாசம் செய்கின்ற காரணிகளில் ஒன்றாக நுண்கடன் திட்டம் அசுரவளர்ச்சி பெற்று வருகின்றது.

வடக்கு-கிழக்கில் வன்னிப் பிரதேசத்திலும் கிழக்கிலுமே நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஆதிக்கம் சொல்ல முடியாத  வகையில் வியாபித்திருக்கின்றது. கடந்த கால யுத்தப் பாதிப்புகளின் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கெங்கு வாழ்கின்றனரோ அங்கெல்லாம் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களும் தங்களது படுக்கையையை விரித்துள்ளனர்.

சிறு தொகையிலான கடன் வழங்குவதே இந்நிறுவனங்களின் நோக்கமாக இருக்கின்றது. இதற்காக வடக்கு கிழக்கின் மலையகங்களிலும் பிரதான நகரங்களிலும் கிராமங்களிலும் இந்த நிதி  நிறுவனங்கள் தமது அலுவலகங்களைத் திறந்து வைத்துள்ளன. எங்கெல்லாம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்கள் வசிக்கின்றனரோ அவர்களை இந்நிறுவனங்கள் இலகுவாகவே பொறி வைத்து வளைத்துப் பிடித்து விடுகின்றன.

கோழி வளர்ப்பு-வீட்டுத் தோட்டம் ஆடு வளர்ப்பு என்றெல்லாம் சுயதொழில் முயற்சிகளின் பேரில் வறியவர்களுக்கு இந்நிறுவனங்கள் நுண்கடன் (சிறிய தொகைக் கடன்) வழங்குகின்றன.
வடக்கு-கிழக்கிலுள்ள வறிய மக்களைப் பொறுத்தவரை அவர்கள் யுத்தத்தின் விளைவாக அனைத்தையும் இழந்த கையறு நிலையிலேயே உள்ளனர். இலவசமாகவோ இப்படியான எந்தவொரு உதவியையும் தட்டிக் கழிக்கின்ற மனோநிலையில் அவர்கள் இப்போதைக்கு இல்லை. எந்தவொரு உதவி கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்ற வறிய நிலையிலேயே அம்மக்கள் உள்ளனர்.
இம்மக்களின் பலவீனத்தை நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் நன்றாகவே தெரிந்து புரிந்து வைத்திருக்கின்றன. கடனாளிகளை தேடிப் பிடிப்பதற்காக கிராமங்கள் தோறும் இந்நிறுவனங்கள் முகவர்களை வைத்திருக்கின்றன. நுண்கடன் வலையில் விழுந்து விடும் ஒரு வறிய குடும்பம் பின்னர் மீண்டு எழுவதற்கு வழியே இல்லை......

 கடன் நடைமுறைகளை ஏற்றுக் கொண்டு படிவங்களில் அத்தாட்சிக் கையொப்பம் இட்டு பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர்(படிவங்கள் உள்ள விடையங்கள் எல்லாம் ஆங்கிலத்திலும் அதிகமானபக்கங்களை கொண்டிருப்பதாலும்    கையொப்பம இடப்படவேண்டியபக்கங்களே குறைந்தது 10க்கு மேல் இருக்கும் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் வைக்க வேண்டியது தான் முக்கியமானது பணம்தான்) பின்வரும் விளைவுகளை எண்ணிப்பார்ப்பதில்லை.... தவணை முறையில் அதனை மீளச் செலுத்தியே ஆக வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறுகின்ற போதுதான் பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன.

நுண்கடன் பெற்றுக்கொண்டவர்களில் கூடுதலானோர் கடனை மீளச் செலுத்தத் தவறுகின்றனர். அவர்களிடம் அதற்கான பணமோ....வருமானமோ.... இல்லாத நிலையில் கடனை மீளச் செலுத்துவது எவ்வாறு.............................?

ஓரிரு மாதங்கள் மாத்திரம் நிதி நிறுவனங்களை ஏமாற்றி காலத்தைக்கடத்த முடியும். கழிவறையில் ஒழிந்து கொள்ள முடியும். அதன் பிறகு நிறுவனத்தை ஏமாற்றுவது சாத்தியமில்லை. நிதிநிறுவன ஊழியர்கள் வீடு தேடி வருவதற்கு ஆரம்பித்து விடுவார்கள்.
  • முதலில் அறிவித்தல் விடுத்துப் போவார்கள்
  • பின்னர் வந்து மிரட்டுவார்கள்.
  • நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகப் பயமுறுத்துவர்.
கடனைப் பெற்றுக் கொண்ட நபர் வட்டியுடன் சேர்த்து பெரும் தொகையொன்றை மீளச்செலுத்த வேண்டியிருக்கும். அதற்காக தனது காணியையோ அல்லது வேறேதும் உடைமையையோ விற்க வேண்டியுமிருக்கும். இறுதியில் அவர்கள் பெரும் மனவிரக்திக்கு ஆளாவதுடன் மறைந்து வாழும் சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர். உண்மையில் குறித்த நுண்நிதி நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு துணைநிற்க வேண்டுமே தவிர மாறாக அவர்களை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட முயற்சிக்கக்கூடாது குறிப்பாக தற்போதைய நிலையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி கடன் திட்டத்தைத் தவிர்த்து அனைத்து நுண்கடன் திட்டங்களினதும் வட்டிவீதம் 22 வீதத்தையும் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதாவது 100 ரூபாவுக்கு 22 ரூபாவை சில நேரத்தில் 30 ரூபாவை வீதமும் செலுத்தவேண்டியுள்ளது-

இந்நிலையில் போதிய வருமானமற்ற குடும்பங்கள் கடனை மீள செலுத்த முடியாது தவித்து வருகின்றன. அது மாத்திரமின்றி மேலும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து நுண்கடனைப் பெற்றுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன  நுண்நிதி நிறுவனங்கள் தமது கடன்களை மீள அறவிடுவதற்கு பல்வேறு காலவரையறைகளை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கடன்களை மீள செலுத்த தவறுவோர் மிகுந்த இம்சைகளுக்கு ஆளாவதைக் காண முடிகின்றது .

கடன்தொகையை அறவிடவருவோர் குறித்த கடனாளி அதனை செலுத்தத்தவறும் பட்சத்தில் அவர்களை மிரட்டி தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து  மீளப்பெற முயற்சிக்கின்றனர்.

நுண்கடன்களை மீளப்பெறவருவோர் திரைப்படங்களில் வரும் தாதாக்களைப்போல நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர் பெண்கள் என்றும் பாராமல் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் வீட்டு வாசலில் வந்து கூச்சலிடுவதாகவும் இதனால் தமது கௌரவமும் பாதிக்கப்படுவதாகவும்   கிழக்கு  வடபகுதியிலும் பெரும்பாலான குடும்பங்கள் கடன் சுமையால் தத்தளிப்பது மாத்திரமின்றி தவறான முடிவுகளை எடுக்கவும் தள்ளப்படுகின்றனர் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் அதனை அறவிடவருவோருக்கு அஞ்சி சிலர் தூக்கில் தொங்கியும் தீ வைத்துக்கொண்டும் கிணற்றில் பாய்ந்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

 குறித்த குடும்பங்களின் வருமானம்-தொழில் கடனை மீள செலுத்தக்கூடிய நிலை என்பவற்றைக் கருத்தில் கொள்ளாது இவ்வாறு நுண்நிதி நிறுவனங்கள் கடனை வழங்கிவிட்டு பின்னர் அடாவடித்தனத்தில் அதனை மீட்க முயல்வது மிகவும் விசனத்திற்குரியது.
வருமானம் குறைந்த ஏழைக்குடும்பங்கள் எவ்வாறேனும் அதிலிருந்து மீளும் வகையில் கடனைப்பெற தள்ளப்படுகின்றன நாட்டில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் நுண்நிதி நிறுவனங்கள் வெறுமனே எழுந்தமானத்திற்கு கடனை வழங்கி மக்களை கடனாளியாக்கிவிட்டு பின்னர் அவர்களை துரத்தி கடனை மீள செலுத்த நிர்ப்பந்திப்பது சமூக மட்டத்தில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சுயதொழில் முயற்சிக்காக நுண்கடன் பெற்றுக் கொண்ட பெண்கள் சிலரிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபடுவதற்கும் நுண்கடன் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வறுமையைப் பயன்படுத்தி பெண்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் சீர்கேடான நிலைமைக்கு நுண்கடன் திட்டங்கள் வழியேற்படுத்திக் கொடுப்பது தெளிவாகத் தெரிகின்றது.


"யுத்தம் பாதித்த மண்ணில் இன்று இதுவொரு பாரிய பிரச்சினை” 

 நுண்கடன்  நிறுவனங்கள்கொண்டிருக்க வேண்டிய முக்கிய விடையங்கள்
1. நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்கும் போது உரிய செயற்றிட்டத்தை ஆராய்ந்த பின்னரே கடன்களை வழங்க வேண்டும்.
2. கடன் சிபார்சுக்காக கிராம சேவக உத்தியோகத்தர்-அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் அனுமதி கையொப்பத்தை உறுதிப்படுத்திய பின்னர் வழங்க நடவடிக்கை எடுத்தல்.(சிறுதொகைகள் கொடுக்கவேண்டியும் காலதாமதமும் ஏற்படும்)
3. கடன் அறவிடுவோர் எந்தக் காரணம் கொண்டும் கிராமங்களுக்கோ-வீடுகளுக்கோ நேரடியாக வந்து கடன் பணத்தை அறவிடுவதை விடுத்து நுண்கடன் வழங்கும் நிலையங்களில் அறவிடல்..
4. ஆய்ந்தறிந்து ஒரு நபருக்கு ஒரு நுண்கடன் நிறுவனமே கடன் வழங்க வேண்டுமே தவிர பல நுண்கடன் நிறுவனங்கள் ஒரு நபருக்கு கடன் வழங்கக் கூடாது.

எனவே பெறுமதியான உயிர்களைக் காப்பாற்ற அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைவோம்!


இவர்களில் அனேகமானவர்கள் ஒரு கடனை அடைக்க இன்னும் ஒரு கடனை பெற்றவர்களே ஒரு சிலரே சுய தொழிலுக்காக பெற்றவர்கள்.
ஆக அனேக மக்கள் அந்த கடன் வட்டத்திற்குள் சென்று விட்டனர் ஆக அதில் இருந்து மீள்வது அவ்வளவு சுலபம் அல்ல. எமது மக்களின் வளம் கம்பனிகளிடம் சென்று கொண்டு இருக்கின்றது.
கல்விமான்களே பொருளாதார வல்லுனர்களே இதில் இருந்து மக்களை வெளியே எடுக்க வழியை காட்டுங்கள்.

ஆரம்ப காலங்களில் உலக வங்கிகளிடம்  இலங்கை கடன்திட்டங்களை பெற்றுக்கொண்டது. அபிவிருத்திக்காக யுத்த காலத்தில் கூட இப்படி இல்லை...
தற்போது இலங்கைக்குள் புதிய பொறிமுறை செய்முறையில் மைக்ரோ பினான்ஸ் நுண்கடன் திடடங்கள் நாடுமுழுவதும் எங்கு பார்த்தாலும் அதன்முகம் தான்.
ஆரம்பகாலத்தில் தற்போதைய போன்ற அரச அரசசபர்பற்ற  வறுமையில் வாழும் மக்களின் அபிவிருத்திக்கு நுண்கடன் திட்டத்தினை வழங்கினாலும் அரசசாரா நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நுண்கடன் நிறுவனங்களின் முக்கிய கையாளும் உத்திகள்
  • அதிகளவான வட்டி
  • குறைந்தளவிலான அடிப்படையில் கடனை வழங்குதல்
  • பெண்களை மையமாக பயன்படுத்துவது.
  • பெரிய அதிகாரிகள் ஆரம்பத்தில் வீ டுகளுக்கு வரவது(நம்பகத்தன்மை)
  • வாராந்த முறையில் கடன்கள் மற்றும் வட்டியினை பெற்று கொள்ளுதல்
  • விரைவிலேயே வழங்குவது.
  • வீடுகளில்அதிகநேரங்களில் பெண்கள் தான்இருப்பார்கள் அவர்களுக்கு நுண்கடன்பற்றிய ஆசைவார்த்தையினை விளம்பரத்தினை செய்து பொறியில் சிக்கவைத்தல்.
  • தேவையற்ற விடையங்கள் தேவையான விடையங்களாக அடையபளப்படுத்துதல்.
  • அதீத ஆசை-பெருமை-உல்லாசம்
  • அதிகளவான வட்டியைபெறுவதே நிதிநிறுவனங்களின் நோக்கம்.
  நுண்கடன் பெறுவதன் பிரதான நோக்கம்
  • வீடு வாங்குதல் காணி வாங்குதல்
  • பிள்ளைகளின் கல்விச்செயற்பாடு
  • அதிஸ்ரலாபசீட்டுக்கள்
  • ஆடம்பரச்செலவுகள்
  • வாகனங்கள் வாங்குதல்
  • தொழில் முயற்சிகள்
  •  கலியாட்டத்தின் மீது அதீத ஆசை
  • அதிகமான பணத்தேவை
  • வறிய குடும்பங்கள்
  • பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

கடன் பெறும் இடங்களாக…
  • கிராமிய வங்கிகள்
  • சமுர்த்தி வங்கிகள்
  • அரச வங்கிகள்
  • தனியார் வங்கிகள்
  • தனி நிறுவனங்கள்
  • நுண்கடன் நிதி நிறுவனங்கள்
  • போலியான வீட்டுத்தளபாடங்கள்-
  • தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி பணமோசடி
  • வேளிநாட்டு வேலைவாய்ப்பு பணமோசடி
  • பாலியல் இலஞ்சம்
  • கொடுப்பனவுகள்
  • குழுக்கடன் கொடுப்பனவுகள்
  • அதிகார துஸ்பிரயோகம் அடிமை வாழ்வும்
  • வாழ்வாதாரம் என்ற பெயரில் கோழிவளர்ப்பு ஆடு மாடுவளர்ப்பு கொடுக்கின்றார்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குதான் அதற்கான தீனிகொடுப்பார்கள் அதன் பின்பு கொடுப்பதில்லை அப்படியாயின் அதன்பிறகு என்ன செய்வது எப்படியும் அந்த ஆடோ...மாடோ...கோழியோ.. உடனே பயன்தரக்கூடியது அல்ல குறைந்தது 3மாதங்களோ...6மாதங்களோ...ஆகும் அந்த இடைவெளியில் வாழ்வாதாரம் பெற்றவர்கள் நிலை அவர்கள் பெற்றுக்கொண்ட வாழ்வாதாரத்திட்டங்களுக்கான தக்கவைத்துக்கொள்ள கடன்பட்டு என்றாலும் பாதகாக்கவேண்டிய நிலையில் மீண்டும் கடனாளிகளாகவே ஆக்கப்படுகின்றார்கள்.

கோழி-மாடு-ஆடு தீனி போடுவதற்கு காசில்லை (அதற்கும் கடன் தான்)
நுண்கடன் திட்டம் என்பது வறுமையில் உள்ளவர்களை சுயதொழில்கள் முயற்சிகள் மூலம் முன்னேற்றமடைய வைக்கவேண்டும்.
 ஆனால் நிறுவனங்களுக்கு பணம் தான் முக்கியமே தவிர மக்கள் அல்ல...

 அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சி...

  • நுண்கடனால் அதிகமாகப்பாதிக்கப்பட் பெண்களுக்கானவட்டியை நிறுத்த அரசு தீர்மானம் ரூபா-150.000 குறைவான கடன் பெற்றோருக்கு அரசு சலுகை. அப்பாவி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நிதி அமைச்சு அறிவிப்பு
  • முறையான முகாமைத்துவமின்றி  செயற்படும் சிறு நுண்கடன் நிறுவனங்களான 151 நிறுவனங்களான இனங்காணப்பட்டுள்ளது இவ்நிறுவனங்கள் வேறுநிதி நிறுவனங்களோடு சேரந்து செயற்படாவண்ணம் அவதானிக்கப்பட்டுள்ளார்கள்.
  • இவ்வாறு மக்களின் நிதியை துஷ்பிரயோகம் செய்யும் நிதிநிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு 50இலட்சம் ரூபாவினை தண்டப்பணமாகவும் அல்லது 5வருட சிறைத்தண்டணையும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.
நிதிமோசடிகள் தொடர்பாக ஈடுபடும் நிறுவனங்கள் தொடர்பான சட்டதிருத்தங்களைமேற்கொண்டு  உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நிதியமைச்சு தீர்மாணித்துள்ளது.

 "வட்டிக்காகங்கள் -பொலீ காக்கோ"…என்று அழைக்கப்படும் அரக்கன் தான் இந்த நுண்நிதிக்கடன்.

இலங்கை மத்திய வங்கி மக்களிடம் இருந்து முறைப்பாடுகள் வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடன்கள்  வழங்கும்  மற்றைய நிறுவனங்கள் தொடர்பான சட்டங்கள் வழங்கினாலும் நுண்கடன் வழங்கும்  நிறுவனங்களுக்கு சட்டவரைபு மாத்திரமே கொண்டுவரமுடிந்தது.

வடக்கில் செய்ற்படும் நுண்நிதி நிறுவனங்களில் அதிகளவிலான வட்டியை பற்றிய மத்திய வங்கிக்கு முறைப்பாடுகள் வந்துள்ளது.
நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பெறப்பட்ட முறைப்பாடுகடுக்கு மிகவிரைவில் தீர்மானங்கள் எடுப்பதாகவும் மத்திய வங்கி அறிவத்துள்ளது.

 நுண்நிதி எனும் கொடியவனால் இதுவரை காவுகொள்ளப்பட்ட உயிர்கள்..

கிழக்குமாகாணத்தில் நுண்கடன் மட்டக்களப்பு மாவட்டம் 05மாதங்களுக்கு 53தற்கொலைகள் மரணச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
2016ம்ஆண்டு 97தற்கொலை மரணங்களும்
2017 ஆண்டு 116 த
ற்கொலை மரணஙகளும
2018 இவ்வாண்டு 6மாதத்திலேயே 63 தற்கொலைகள்
இடம்பெற்றுள்ளது.
இதைவிடவும் அதிகமாக இருக்கும் இதற்கு முறையான தீர்வு காணப்படாவிட்டால் இன்னும் எராளமான உயிர்ப்பலிகள்.....

நுண்நிதிக்கடன் செயற்றிட்டங்கள் தற்போது வரையிலும் நாட்டில் பல உயிர்களை காவு கொண்டுள்ளதுடன் இது மீண்டும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பினை நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.

நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் பணத்திற்குப்பதிலாக அதிகவட்டியினை எதிர்பார்க்குமே தவிர மக்களின் பொருளாதார முன்னேற்றத்தினை வழியமைக்காது.

இங்கே நுண்நிதி நிறுவனங்கள் மூலம் நிதியினைப்பெற்று சுயதொழில் மூலம் வாழ்வில் முன்னேறியவர்களும்  இருக்கத்தான் செய்கின்றார்கள்
.
ஆக மக்களிடையே விழிப்புணர்வும் நுண் நிதிநிறுவனங்கள் அரசாங்கம் தெளிவுரையும் சட்டவரைபையும் கொண்டு வந்து மக்களின் வாழ்வையும் உயிரையும் பாதுகாக்கவேண்டியது பாரிய பொறுப்பாகும்.

மக்களிடையே விழிப்புணர்வை கொண்டுவரவேண்டும்.....
மரணங்களை தடுக்க எல்லோரும் இணைய வேண்டும்.....

கவிஞர்-வை-கஜேந்திரன்-



நுண்கடனால் புண்படும் பெண்கள்...வேடிக்கை பார்க்கும் கண்கள்.... Reviewed by Author on June 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.