அண்மைய செய்திகள்

recent
-

ராணுவத்தினரின் கல்லறைகளை தோண்டும் வடகொரிய மக்கள்: விசித்திர காரணம் -


வடகொரியாவில் புதைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரின் கல்லறைகளை தோண்டி உடல் பாகங்களை அந்நாட்டு மக்கள் பாதுகாத்து வருவதாக விசித்திர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கொரிய போர் காலகட்டத்தில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் பலரின் உடல்களை வடகொரியாவிலேயே அடக்கம் செய்துள்ளனர்.
தற்போது அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளின் நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், பணத்திற்காக வடகொரிய மக்கள் விசித்திர பணியை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ராணுவத்தினர் புதைக்கப்பட்டதாக கூறும் பகுதிகளில் உள்ள கல்லறைகளை தோண்டி பாகங்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அங்குள்ள மக்கள் பத்திரப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டின்போது வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், அமெரிக்க ராணுவத்தினரின் உடல் பாகங்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பும் பணிகளை மிக விரைவில் துவங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும் வடகொரிய மக்களுக்கு தெரிந்தே இருந்தது. அமெரிக்கா தங்கள் நாட்டு ராணுவத்தினரின் உடல்களை தேடுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை என்பது.
அதனால், கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பாகங்களை அமெரிக்கர்களிடம் கையளித்து அதிக பணம் ஈட்டலாம் என வடகொரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

வடகொரியாவில் உள்ள சோசின் நீர்த்தேக்கம் பகுதியில் பலரது உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பலரது பெயரும் தெரியவந்துள்ளது.
ஆனால் வடகொரிய மக்கள் அமெரிக்க ராணுவத்தினரின் உடல்களை மட்டுமே பாதுகாப்பதாகவும், கொரிய ராணுவத்தினரின் உடல்களை எடுத்த கல்லறைகளிலேயே புதைப்பதாகவும் கூறப்படுகிறது.
உரிய பெயர் அடையாளம் இருந்தால் ஒரு அமெரிக்க ராணுவ வீரரின் உடலுக்கு 1000 டொலர் வரை சீன தரகர்கள் அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்புடனான சந்திப்பின்போது 200 ராணுவ வீரர்களின் உடல்களை ஒப்படைப்பதாக கிம் ஜாங் உன் உறுதியளித்திருந்தார்.
ஆனால் கொரிய ராணுவத்தால் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை பலமடங்கு இருக்கும் என கூறப்படுகிறது.
ராணுவத்தினரின் கல்லறைகளை தோண்டும் வடகொரிய மக்கள்: விசித்திர காரணம் - Reviewed by Author on June 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.