அண்மைய செய்திகள்

recent
-

63 பேரப் பிள்ளைகளுடன் அசத்தும் 102 வயதான இலங்கை பாட்டி


மாத்தளையில் 102 வயதில் மூதாட்டி ஒருவர் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

கனேவெல மூன்றாம் தலைமுறையின் பேரப் பிள்ளைகளை பார்த்த மூதாட்டி தனது 102 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார்.
1917ஆம் ஆண்டு பிறந்த மரிய விஜேரத்னவுக்கு 63 பேரப் பிள்ளைகள் உள்ளனர்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்தினர் சிறிய விருந்து ஒன்றை ஏற்பாடு சென்றுள்ளனர்.

அவரது கண் பார்வை மற்றும் காது கேட்கும் திறன் சற்று குறைவடைந்துள்ள போதிலும் உடலில் ஆரோக்கியம் குறையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் அன்பு மற்றும் கவனிப்பே மூதாட்டி ஆரோக்கியமாக வாழ உதவியுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரை கண்டு கொள்ளாமல் விட்டு செல்லும் காலத்தில், பாட்டி ஒருவரை இவ்வளவு அன்பாக பார்த்து கொள்ளும் இந்த குடும்பத்தினர் .

இன்றைய சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என குறிப்பிடப்படுகின்றது.
பாட்டியின் ஆரோக்கியம் தொடர்பில் அவரிடம் வினவிய போது, “எங்கள் காலத்தில் குரக்கன், கிழங்கு போன்றவற்றையே உணவாக உட்கொண்டோம். இன்றைய காலகட்டத்தில் நோய் மக்களை இலகுவாக தாக்குகின்றது. கஷ்டப்பட்டு வேலை செய்யாமையே அதற்கு காரணமாகும். விஷம் கலந்த உணவுகள் பெற்றுக் கொள்கின்றமையே இந்தக் காலத்து மக்களுக்கு ஆயுள் குறைவாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

63 பேரப் பிள்ளைகளுடன் அசத்தும் 102 வயதான இலங்கை பாட்டி Reviewed by Author on July 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.