அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் அதிக அளவில் தமிழர்கள் கொல்லப்பட்டது இந்த மாதம் தான்! கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிக்கை -


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்போது இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் 35-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிடடுள்ளார்.
அதில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் விடுதலைக்காக போராடிய தமிழர்கள் மீது போர் தொடுக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நாளை கனடா வாழ் மற்றும் உலகம் வாழ் தமிழர்களுடன் இணைந்து நினைவு கூறுகிறேன்.
இந்த ஜூலை மாதத்தில் தான் பெரிய அளவில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த மாதத்தை கருப்பு ஜூலையாக அனுஷ்டிக்கிறோம்.

35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாதத்தில் துவங்கிய போர்தான் இறுதியில் லட்சக்கணக்கான தமிழர்களை பலி வாங்கியது. 2009-ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தது.
1983-ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு வெளியேறிய தமிழர்கள் சுமார் 1800 பேர் கனடாவில் குடியேறி நாட்டுக்காக உழைத்தனர்.
இன்று நாங்கள் இந்த நிலைமைக்கு இருக்கிறோம் என்றால் அதற்கு அவர்கள்தான் காரணம்.
கருப்பு ஜூலையில் பலியாகி, தனது சொந்த பந்தங்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர் வரும் காலத்தில் அனைத்து வளங்களையும் பெறுவதற்கு உழைப்போம், அமைதியை பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிக அளவில் தமிழர்கள் கொல்லப்பட்டது இந்த மாதம் தான்! கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிக்கை - Reviewed by Author on July 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.