அண்மைய செய்திகள்

recent
-

சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தி எமது வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் -


சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தி எமது வரலாற்றை ஆவணப்படுத்தி வெளியிடுவது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான தேவையாகவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் திருக்கோணேஸ்வரத்தின் அடிவாரத்தில் உள்ள சமுத்திரத்தில் ஆதிகால திருக்கோணேஸ்வரத்தின் சிதைவுகள் மற்றும் வரலாற்று உண்மைகளும் புதைந்துள்ளது, அதனை வெளிக் கொணர ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
1624ம் ஆண்டு போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்ட போது இவ்வாலயத்தில் ஒரு பகுதியாக இருந்த 1000 கால் மண்டபத்தை உடைத்தே தற்போதுள்ள பிரட்ரிக் கோட்டை உருவாக்கப்பட்டுள்ளதாக தாம் அறிந்துள்ளோம்.

மேலும் சமுத்திரத்தின் அடியில் ஆலயத்தின் பல சிதைவுகளும் வரலாற்று உண்மைகளும் புதையுண்டுள்ளது. எனவே இந்த ஆராய்ச்சி சட்டபூர்வமாக இடம்பெற வேண்டும் எனவும் நாம் விரும்புகின்றோம்.
இராவணன் இலங்காபுரியை ஆண்ட பலம் வாய்ந்த தமிழ் மன்னன் அவர் சிவபொருமானின் தீவிர பக்தனாக இருந்துள்ளார். அதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. திருக்கோணேஸ்வரத்தின் வலது புறத்தில் உள்ள இராவணன் வெட்டு அதற்கு ஒரு சான்றாகும் என்றார்.
இராவணன் இலங்கையில் பல சிவாலயங்களை கட்டியது மட்டுமல்லாது இந்தியா இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் சிவாலயங்களை அமைத்துள்ளார்.இந்தியா மற்றும் ஏனைய பல நாடுகளில் அவரை கடவுளாக வழிபடும் வழக்கமும் காணப்படுகின்றது.

இராவணன் ஆயுள்வேத வைத்தியத்திலும் கை தேர்ந்தவர் என்றும் வரலாறு கூறப்படுகின்றது. இராமாயணத்தில் இராமன் பற்றி அதிகமாக கூறப்பட்ட போதும் இராவணன் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை அந்த குறையை போக்க யார் இந்த இராவணன் என்ற நூல் வெளி வந்துள்ளது என்று நான் கருதுகின்றேன்.

எனவே சரித்திர ரீதியான ஆய்வுகள் நடாத்தப்பட்டு உண்மைகள் வெளியிட வேண்டியது அவசியம் இவ்வாறான ஒரு சரித்திர ரீதியான ஆய்வு நூலை வெளியிட்ட நூலாசிரியர் என.கே.எஸ்.திருச்செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தி எமது வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் - Reviewed by Author on July 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.