அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் இடம்பெறும் கொலை, கொள்ளைக்கு இதுவும் பின்னணியாக இருக்கலாம்! முதலமைச்சர் சந்தேகம் -


நீண்டகால யுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கலைமகள் சனசமூக நிலையத்தின் 65வது ஆண்டு விழாவும், பிரதேச மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதி இன்று மாலை இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

நீண்டகால யுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது
இவர்களின் துயரைத் துடைப்பதற்கு கடல் கடந்த நாடுகளில் உள்ள அவர்களின் உறவுகளும்,சமூக அமைப்புகளும், அரசுசாரா நிறுவனங்களும், பரோபகாரிகளும், தனவந்தர்களும் பல்வேறு உதவிகளைப் புரிந்து வருகின்றார்கள் என்பது உண்மை தான்.

எமது மக்களும் இவ்வாறான உதவிகள் கிடைக்கப்பெறுகின்ற போது தமது துன்பச் சுமைகளில் இருந்து சற்று விடுபட்டு இவ் உதவிகளுடன் வாழத்தலைப்பட்டுள்ளார்கள்.

ஆனால் அதன் விளைவு எம்முட் பலரின் மத்தியில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாது போய்விட்டது.தற்போது கிடைக்கின்ற உதவிகள் தொடர்ச்சியாகக் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட முடியாதவை.
இவ் உதவிகள் நிறுத்தப்படுகின்ற போது எம் மக்கள் உதவியற்றவர்களாக உழைக்க வழி தெரியாதவர்களாக விடப்படுவார்கள். அப்போது அவர்கள்குறுக்கு வழிகளில் பணத்தைத் தேட முயலவேண்டியிருக்கும்.
இன்றைய பல கொலை, கொள்ளைகள் போன்றவை இவ்வாறு கைவிடப்பட்டவர்களால் இயற்றப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழாமலில்லை.

ஆகவே தான் எம் மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் அந்தந்த உதவிகளை மூலதனமாகக் கொண்டு அவற்றின் மூலம் வாழ்வாதார முயற்சிக்கான தொழில் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் அவை அமைந்திருக்க வேண்டும்.
இதனை மீண்டும் மீண்டும் பகிரங்கமாகக் கூறிவருகின்றேன். அதாவது எமக்குக் கிடைக்கும் உதவிகள் நுகர்வதற்குப் பாவிக்கப்படாமல் உற்பத்தியை உண்டுபண்ண, பெருகச் செய்ய உதவ வேண்டும்.

அவ்வாறில்லாமல் அவ்வப்போது வழங்கப்படுகின்ற உதவிகள்மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும், கைத்தொலைபேசிகள் வாங்குவதற்கும், ஐஸ் பெட்டி வாங்குவதற்கும் பாவிக்கப்பட்டால் எம்மக்களை சோம்பேறிகளாக்குவதற்கான உதவிகளாகவே அவற்றை நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
வடக்கில் இடம்பெறும் கொலை, கொள்ளைக்கு இதுவும் பின்னணியாக இருக்கலாம்! முதலமைச்சர் சந்தேகம் - Reviewed by Author on August 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.