அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களின் பிடியில் பல்கலைக்கழகங்கள் - எஸ்.பி.திஸாநாயக்க -


பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் தற்போதைய ஆட்சியின் பல்கலைக்கழங்களின் அதிகாரம் மீண்டும் மாணவர்களின் கைகளுக்குள் சென்றுள்ளது எனவும் முன்னாள் உயர்கல்வி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகத்தை மாணவர்களிடம் இருந்து கைப்பற்றி, நான் அதனை பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடம் கையளித்தேன்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மாணவர்கள் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டனர், முன்னிலை சோசலிசக் கட்சியினரே பேராதனை பல்லைக்க்கழகத்தை முழுமையாக கட்டுப்படுத்துகின்றனர்.

முன்னிலை சோசலிசக் கட்சியினரே உபவேந்திரின் விடுதியிலும் இருக்கின்றனர். மாணவர்களான பிக்குகளே மிகவும் கொடூரமான முறையில் பகிடிவதை செய்கின்றனர்.
மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது முற்றிலும் நியாயமானது, அரசியலில் ஈடுபடுவது என்பது பல்கலைக்கழகங்களை கட்டுப்படுவதில்லை, நான் மாணவர்களை அழைத்து பேசி உங்களுக்கு ஏதுவும் தர போவதில்லை பேசி விரட்டி விடுவேன்.

குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டும். பெட்டன் பொல்லுகள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் என்பன போதுமானது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் பிடியில் பல்கலைக்கழகங்கள் - எஸ்.பி.திஸாநாயக்க - Reviewed by Author on August 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.