அண்மைய செய்திகள்

recent
-

32 வயதில் தூங்கி 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்: நடந்தது என்ன? -


பிரித்தானியாவை சேர்ந்த நாவோமி ஜைக்ப்ஸ் என்ற பெண்மணி 32 வயதில் தூங்கி 15 வயதில் விழித்துள்ள அதிசயம் நடந்துள்ளது.
எழுத்தாளரான நாவோமி, 'The Forgotten Girl' என்ற புத்தகத்தில் தனது நினைவுகள் மறந்துபோய், அவற்றை மீட்டெடுத்த கதையை எழுதியிருக்கிறார்.

15 வயது சிறுமியாகவே தன்னை உணர்ந்த அவர், அது 1992ஆம் ஆண்டு என்றே நினைத்தார்.
கண் விழித்ததும், முதலில் கண்ணில் பட்டது திரைச்சீலைகள்தான். பிறகு, அலமாரி, நான் படுத்திருந்த படுக்கை என எதுவுமே எனக்கு பரிச்சயமானதாக தெரியவில்லை. என்னை பார்த்தேன், நான் உடுத்தியிருந்த ஆடை என்னுடையதல்ல என்று தோன்றியது" என்கிறார் நாவோமி ஜைக்ப்ஸ்.
"உடனே கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். அது நான் அல்ல என்றே தோன்றியது. நிறம் வெளுத்து வயது கூடிப்போய், வேறு யாரோ கண்ணாடியில் பிரதிபலிக்கிறார்கள் என்றே தோன்றியது. ஆனால், என்னுடைய தோற்றம்தானே கண்ணாடியில் தெரியும் என்று புத்தி சொல்லியது.

'எதிர்காலத்திற்குள் நுழைந்த நாவோமி'
"எனக்கு 15 வயதுக்குரிய உணர்வுகளே இருந்தன. அது 1992ஆம் ஆண்டு என்று நான் நினைத்தாலும், அது 2008ஆம் ஆண்டு, 1992க்கு பிந்தைய நினைவுகள் எதுவுமே எனக்கு இல்லை."
வாழ்க்கைமுறை, தொழில்நுட்பம், இண்டர்நெட், சமூக ஊடகம் ஸ்மார்ட் ஃபோன் என தனது 15 வயதுக்கு பிந்தைய எதுவுமே அவருக்கு புரிபடவில்லை.
தென்னாப்பிரிக்காவில், நெல்சன் மண்டேலா போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார், இராக்கில் சதான் உசேன் ஆட்சியில் இருக்கிறார் பிரிட்டன் இளவரசி டயானாவுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் அதிபராவது அப்போதும் நிறைவேறாத கனவாகவே இருந்ததாகவே நவோமிக்கு தோன்றியது.
இது எல்லாவற்றையும்விட கொடுமையான விஷயம், தனக்கு 10 வயது மகள் இருப்பதை நவோமி உணராததுதான்.
32 வயது நாவோமியை எனக்கு பிடிக்கவேயில்லை. எதிர்காலத்தில் நன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தானே வாழ்வோம்?
ஆனால், மதுவுக்கு அடிமையான நான், எனது குழந்தையை வளர்ப்பதற்கு கஷ்டப்பட்டு அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன் என உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

என்னையே எனக்கு பிடிக்கவில்லை, அந்த வீட்டில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே வசிக்க எனக்கு பிடிக்கவில்லை.
ஒரு மருத்துவரை அணுகி தனது நிலையை எடுத்துச் சொன்னார் நாவோமி. ஆனால் அவர் அதை நம்பவில்லை, எனவே வேறு வழியில்லாமல் தன்னைத் தானே சரிபடுத்திக் கொள்வது என்று முடிவு செய்தார்.
நினைவுகள் மறந்துபோன சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த மற்றொரு காலை வேளையில் மறந்துபோன நினைவுகள் அனைத்தும் திரும்பிவிட்டன.
தனது நினைவுகள் அனைத்தும் திரும்பி, 32 வயது பெண்ணாக மீண்டும் மாறினார் நாவோமி.
நடந்தது என்ன?
உண்மையில் தனக்கு நடந்தது என்ன என்பது மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் நாவோமிக்கு தெரியவந்த்து.
"ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்தித்தேன், எனக்கு நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினேன். என் வாழ்வின் முழு கதையையும் அவர் கேட்டு, ஆராய்ந்தார்.
அவர் நிறைய ஆராய்ச்சி செய்தார், சக மருத்துவர்களுடன் பேசினார். இறுதியில் எனக்கு மறதி நோயின் ஒருவகையான டிஸ்-அசோஸியேடிவ் அம்னீசியா (Dissociative amnesia) ஏற்பட்டிருந்ததை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்."
உண்மையில் நாவோமியின் நினைவுகள் மறக்கவில்லை, வாழ்க்கையில் எதிர்கொண்ட கடுமையான பிரச்சனைகள் அவரது மூளையை பாதித்து, கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதால், குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற நினைவுகளை மூளை மரத்து போகச் செய்துவிட்டது.
தனக்கு ஏற்பட்ட நோய் என்ன என்பதை தெரிந்துக் கொண்டதும், நாவோமிக்கு சற்றே ஆறுதல் ஏற்பட்டது.
32 வயதில் தூங்கி 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்: நடந்தது என்ன? - Reviewed by Author on September 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.