அண்மைய செய்திகள்

recent
-

பிழையான வழியில் சுமந்திரன்! செல்வம் அடைக்கலநாதன் ஆதங்கம் -


சமஷ்டி தீர்வு வேண்டாம் என்ற கருத்தை சுமந்திரன் கூறியிருந்தால் அவர் பிழையான வழியில் சிந்திக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைப் பெறுவதற்காக செயற்பட்டு வரும் நிலையில் கூட்டமைப்பின் கொள்கைக்கு அப்பாலான விடயங்களை சுமந்திரன் கூறியிருப்பாரானால் அது தவறான விடயமாகும்.

சமஷ்டி தீர்வு வேண்டாம், மாகாணசபையில் திருத்தங்களை கொண்டு வந்து அதிகாரம் பகிரப்பட்டால் போதும் என்று சுமந்திரன் கூறியிருந்தால் அவர் பிழையான திசையில் சிந்திக்கிறார் என்றே என்னால் உணர முடிகிறது.
புதிய அரசியலமைப்பு பணிகளில் கூட நாம் சமஷ்டியை தான் வலியுறுத்துவதுடன், எங்களுடைய தேசத்தில் நாங்கள் எங்களை ஆளுகின்ற அடிப்படையில் தீர்வு வரவேண்டும் என்ற ரீதியில் தான் சமஷ்டியை கோருகின்றோம்.

இதன்படி பார்த்தால் அவரின் கருத்து தவறானது என்பதுடன் இது கூட்டமைப்பை திசை திருப்புவதற்கான முயற்சியாக இருந்தால் நான் அதனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.
தமிழ் மக்களுக்கு சமஷ்டியை பெற்றுக் கொள்வதை கூட்டமைப்பு நிலைப்பாடாக கொண்டுள்ள நிலையில் நாமும் அந்தப் பாதையில் தான் பயணிப்போம்.

இதேவேளை சுமந்திரன் உள்ள கட்சியானது அவருடைய கருத்திற்கு சார்பான ஓர் முடிவை எடுக்குமெனில் எங்களுடன் இணைந்து பயணிக்க அவர்களால் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
பிழையான வழியில் சுமந்திரன்! செல்வம் அடைக்கலநாதன் ஆதங்கம் - Reviewed by Author on September 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.