அண்மைய செய்திகள்

recent
-

மதத்தலைவர்கள் மதங்களுக்கும் மொழிகளுக்கும் மதிப்பளிக்கும்போது மாணவ செல்வங்களும் அவற்றை பின்பற்றுவார்கள் ஆயர் இம்மானுவேல் ஆண்டகை


 மன்னார் கல்வி வலயத்தில் மன்.ஓலைத்தொடுவாய் றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் வடக்கு மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட திட்ட நிதியீட்டினூடாக நிர்மானிக்கப்பட்டகட்டிடத் திறப்பு விழா நேற்று புதன் கிழமை (10.10.2018) இடம்பெற்றது.

அதிபர் நோயல் இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில்மன்னார் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.சுகந்தி செபஸ்தியான், பேசாலை முருகன் ஆலயக் குருக்கள் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள், புதுக்குடியிருப்பு மௌலவி ஏ.ஜே.எம்.பவாஸ் ஆகியோர் உட்பட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவில் ஆயர்  மேதகு பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோஆண்டகை பிரதம அதிதியாக கலந்து கொண்டு இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

கடந்த காலங்களில் இவ் பாடசாலையைப்பற்றி நாம் பார்த்தபொழுது இங்கு பயின்ற மாணவர்கள் பலர் மரங்களுக்கு கீழே இருந்துதான் இவ்வளவு நாட்களும் கல்விகற்று வந்துள்ளனர் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.

இந்த நிலையில் இவ் பாடசாலைக்கு ஒரு புதிய கட்டிடம் திறந்து வைப்பதில்
எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாகும். நான் மன்னார் மறைமாவட்டத்தை
பொறுப்பேற்று இன்னும் பத்து மாதங்கள் கடக்கவில்லை. ஆனால் நான் பல
பாடசாலைகளின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வரும்பொழுதெல்லாம் மன்னார்கல்விப் பணிப்பாளர் திருமதி செலின் சுகந்தி செபஸ்தியான் கலந்து
வருகின்றார்.

இன்னும் ஓரிரு தினங்களுக்குள் இவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற
இருக்கும் வேளையில் இவர் தனது பணியை எவ்வளவு சிறப்பாக
செயல்படுத்தியிருக்கின்றார் என்பது நான் நன்கு அறியக்கூடியதாக
இருக்கின்றது.

இந்த கல்விப் பணிப்பாளரின் அர்ப்பணிப்பை நான் நோக்கும்போது உண்மையில் பிள்ளைகள் கல்வி கற்று தேர்ச்சி பெற்றுச் செல்ல வேண்டும், இவர்களுக்கு கட்டிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல மாணவர்கள் நல்ல உருவாக்கம் பெற வேண்டும் அதுமட்டுமல்ல மாணவ சமூகத்தில் நல்ல மனித நேயம் உருவாக வேண்டும் என்ற நோக்கிலே வலய பணிப்பாளர் தனது பணியை முன்னெடுத்துச் சென்றுள்ளதை நான் நோக்கியுள்ளேன்.

திறக்கப்பட்ட இவ் கட்டிடத்தின் பெயர் செபஸ்தியான் பிளக் என
எழுதப்பட்டிருந்ததை நான் கண்ணுற்றேன். புனித செபஸ்தியார் ஒரு பிறமிருக்ககல்விப் பணிப்பாளரின் மறைந்த கணவரின் பெயரை இந்த பாடசாலை சமூகம்பெயரிட்டிருக்கின்றது என்றால் ஒரு பின்தங்கிய பாடசாலைக்கு ஒரு கட்டிடத்தைவழங்கியமைக்காக இவ் சமூகம் நன்றியாக இவ் பெயரையீட்டிருப்பது உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். பாடசாலைகளில் எந்த மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாம் ஒவ்வொருமதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவர்களுக்கான மதிப்பையும் அன்பையும்பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இங்கு கத்தோலிக்கம் இந்து இஸ்லாம் ஆகிய மதத்தலைவர்கள் நாம்
இருக்கின்றோம். ஒவ்வொரு மதத் தலைவர்கள் நாமும் ஒன்றுபட்டு மதங்களுக்கும் மொழிக்கும் கொடுக்க வேண்டிய மதிப்பை தொடர்ந்து வழங்குபவர்களாக இருக்க வேண்டும்.

அப்பொழுது இவைகள் எமது மாணவ செல்வங்கள் மத்தியிலும் வளரும் என்பது திண்ணம். நாம் பலதரப்பட்ட மதங்கள் கொண்டவர்களுடனும் மொழி
பேசுகின்றவர்களுடனும் இணைந்து வாழ்வதால் நாம் ஒருவரை ஒருவர் மதிக்கும் தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மதத்தலைவர்கள் மதங்களுக்கும் மொழிகளுக்கும் மதிப்பளிக்கும்போது மாணவ செல்வங்களும் அவற்றை பின்பற்றுவார்கள் ஆயர் இம்மானுவேல் ஆண்டகை Reviewed by Author on October 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.