அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் குறைகளை நிறைகளாக மாற்றித்தருமாறு...மன்னார் பிரஜைகள் குழு ஐனாதிபதியிடம் முறையீடு.

மன்னார் மாவட்டத்தில் பல காலம் தொட்டு நிமிடத்துக்கு நிமிடம் மின் தடைகள் ஏற்பட்ட வண்ணம் காணப்படுகின்றது. இவ்  பிரச்சனை தீர்க்க முடியாதுள்ளது. பல தடவைகள் இது தொடர்பாக பல ஆர்ப்பாட்டங்கள்  மகஐர்கள் கையளிப்புக்கள் அரச மற்றும் தனியார் நிறுவன்னங்களால் நடாத்தப்பட்ட போதிலும் இது தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்றாகவே தொடர்கின்றது என மன்னார் பிரஜைகள் குழு மன்னாருக்கு ஐனாதிபதி வருகை தந்தபொழுது இவ் வேண்டுகோள் அடங்கிய மகஐர் ஒன்று பிரஜைகள் குழுத் தலைவரால் ஐனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த வாரம் ஐனாதிபதி மைத்திலிபால சிறிசேன சுற்றாடல் பாதுகாப்பு
மாநாடுக்கு மன்னாருக்கு வருகை தந்திருந்தபொழுது மன்னார் மன்னாரில் மின் தடைக்கு தீர்வு எட்டாத நிலை தொடர்கிறது. மன்னார் பிரஜைகள் குழு ஐனாதிபதியிடம் முறையீடு குழுமகஐர் ஒன்றை அவரிடம் நேரடியாக கையளித்தது.

இதில் தெரிவித்திருப்பதாவது பல தசாப்தகாலமாக நாட்டில் தொடர்ந்து வந்த கொடிய யுத்தம் முடிவுக்கு வந்து மன்னார் மாவட்ட மக்கள் தூர நோக்குடன் தங்கள் சுபீட்சகரமான வாழ்க்கையைவாழ்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் நீண்டநாள் நீடித்து நிற்கக்கூடிய நீதியுடன் கூடிய சமாதானத்தையும் நல்லிணக்கப்பாட்டினையம் இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் எதிர்பார்க்கின்ற நல்லிணக்கப்பாட்டினையும் நிலையான சமாதானத்தையம் பெறும் பொருட்டு மன்னார் மன்னாரில் மின் தடைக்கு தீர்வு எட்டாத நிலை தொடர்கிறது.
மன்னார் பிரஜைகள் குழு  ஐனாதிபதியிடம் முறையீடு வின் தலைவர் என்ற முறையில் சமய தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், மற்றும் அரச, அரசசார்பற்ற உத்தியோகத்தர்களுடன் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு
முயற்சிக்கின்றோம்.

நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மக்களினது மனதிலும் இதயத்திலும் வெற்றியுடன் பிரயாணத்தை முன்னோக்கி செல்வதற்காக பிரச்சனைகளுக்கு தடையாக இருக்கின்ற பிரச்சனையான காரணிகளை மனிதாபிமான முறையில் அணுகி அவற்றை முன்னெடுத்துச் செல்லுகின்றோம்.

ஐனாதிபதியாகிய தங்கள் கவனத்துக்கு ஒரு சில விடயங்களை கொண்டுவரும்
பொருட்டு தேவையான நடவடிக்கைகளை நீங்கள் முன்னெடுப்பீர்கள் என்று
நம்புகின்றோம். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும் பொதுவான விடயங்களை கருத்தில் கொண்டவையாகும்.

இவை தொடர்பாக விரைவான சாதகமான நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் எங்களது செபங்களும் ஒற்றுமையும் இந்த விடயங்களை திர்க்கும்
எனவும் எதிர்பார்க்கின்றோம்.

(வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்)

காவற்துறையினர், தேசிய மனித உரிமை ஆணைக்குழு, பறணகம ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகம் ஆகியன இணைந்து அரச அலுவலகங்கள் பல்வேறு
அரசியல் வாதிகள் போன்றவர்களுக்கு இது தொடர்பான கோரிக்கைகளை விடுத்தும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எதுவித நடவடிக்கைகளையோ அல்லது செய்திகளோ
எட்டப்படவில்லை. யுத்தக்காலத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என அறியப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் இந்த எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் குறிப்பாக வடக்கில் இவ்வாறு வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொலிசாரிடம் முறையிட்டும் வேறுசிலர் பொலிசாரின் அச்சுறுத்தல் மத்தியில் இறுப்புக்கான சான்றிதழ்களும் பெற்றுள்ளார்கள். சிலர் ஏற்கமறுக்கும் போது வற்புறுத்தலுக்கும் உள்ளாகி இருக்கின்றனர்.

(பரிந்துரை)
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை இலங்கையில் எங்கேயும் இடம்பெறவில்லை என
அரசாங்கம் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சிபார்சாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பான ஆணைக்குழு இது தொடர்பாக தனியாக ஆராய்தல்  ஆணையாளர் அரசாங்கத்திலிருந்து
விலகி சுதந்திரமாக செயல்படவும், காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுடனும் எதிர் தரப்பு அரசியல் வாதிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடனும் இணைந்து செயல்படுதல்.

சட்டங்களுக்கமைவாக அவைகளை ஆராயும் பொருட்டு காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் முறைப்பாடுகளை ஏற்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை வற்புறுத்தி
இறப்புக்கான சான்றிதழ்கள் பெறவைத்தல் மற்றும் முறையான விசாரனை
நடாத்தாமைக்கு இது ஒரு சான்றாக அமையாது.

சுயமாக செயல்பட ஐக்கிய நாடுகள் செயற்பாட்டுக்குழுவுக்கு அழைப்புவிடுத்தல்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அழுத்தத்தை சர்வதேச ஒன்றுகூடலில் சீர்செய்யப்படல்.

அரசியல் கைதிகள் 107 அரசியல் கைதிகள் பலவருடங்களாக தடுப்புக் காவலில் எந்தவிதத் தீர்வும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காகவழக்குகள் நீண்டகாலமாக இழுத்தடிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்தவிதமான அடிப்படை வசதிகள் இன்றி பலசிறை கைதிகள் மத்தியில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். தொடர்ந்து தொடர்ச்சியான சித்திரைவதைகளுக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கும் சிறைச்சாலைக் காவலர்களினாலும் மற்றும் அவரோடிணைந்த குழுக்களினாலும் உற்படுத்தப்பட்டு
வருகின்றார்கள். இதனால் அவர்களின் மனநிலை ஒரு அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றது.

(பரிந்துரை)
  • எந்தவித திணிப்புக்களும் இன்றி அவர்கள் யாவரையும் விடுவித்தல்.

  • போதுமான அளவு சாட்சிகள் இல்லாது ஒரு வருடத்திற்கு மேலாக தடுப்புக்காவலில்
வைத்திருப்பவர்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்
விடுவித்தல். மற்றும் தொடர்ந்தும் பல வருடகாலமாக ஏற்கனவே
தடுப்புக்காவலில் இருப்பவர்களை 2019 ஆண்டிற்கு முன் விடுதலை செய்தல்.
  • -குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவித்தல்.

-வரையறுக்கப்பட்ட நாட்களிலும் நேரத்திலும் எந்தவித முன் அனுமதியும்
இன்றி தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்வையிட அனுமதித்தல் மற்றும்
தங்களுக்காக ஆஐராகும் சட்டத்தரனிகளுடன் சிறைச்சாலை காவலாளிகளோ அல்லது
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றி நேரடியாக தொடர்பு கொண்டு கதைப்பதற்கு
ஏற்பாடு செய்தல்.

  • -வடக்கு மாகாண சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருக்கும் சிறைக்கைதிகள் வடக்கு மாகாணத்திலேயே வழக்கு பதிவானபோதிலும் அவர்களை எந்தவிதத்திலும் பூசா, கொழும்பு மற்றும் கண்டி போன்ற முகாம்களுக்கு முக்கியமான காரணங்கள்
இருத்தாலே ஒளிய மாற்றப்படாது வடக்கு நீதிமன்றத்திலேயே விசாரிக்க கோருதல்.

(மீன்பிடி)
மீனவர்களுக்கான பாஸ் முறை தென்பகுதி மீனவர்களுக்கு
கடைப்பிடிக்காதிருப்பதுபோல வடபகுதி மீனவர்களுக்கும் இந்த பாஸ் நடைமுறை
அமுல்படுத்தாது இருத்தல்.
(பரிந்துரை)
  • -பரம்பரைபரம்பரையாக இருந்து வந்த போருக்கு முன்னதான சகல உரிமைகளும் எல்லா சமூகங்களுக்கும் வழங்க உத்தரவாதமளித்து சகல உரிமைகளுடன் அவர்களை மீன்பிடியில் ஈடுபட அனுமதி அளித்தல்.

  • மன்னார் கடற்பரப்புக்கு அப்பால் கடற்தொழில் ஈடுபடும் பாஸ் நடைமுறைஇல்லாதிருத்தல் குறிப்பாக இறால், நண்டு போன்ற கடல் உணவுகளுக்காக இந்த நடைமுறை இல்லாதிருத்தல்.

  • கடற்தொழில் ஈடுபடும் தொழிலாளிகளுக்கு இராணுவ மற்றும் அரசியல் தலையீடுகள் இல்லாதிருத்தல்.

  • மீன்பிடிக்கான வழமையான நடைமுறைகளை அமுல்படுத்தல் சகல இலங்கை வாழ் மீன்பிடித் தொழிலாளர்களுக்கும் குறிப்பாக வடபகுதி மீனவர்களுக்கு மட்டும் சில விதி விலக்குகளை அமுல்படுத்தாது இருத்தல்.

மீனவர்களுக்கு சொந்தமான உடமைகளை அதாவது மீன் வாடி வள்ளங்கள் போன்றவற்றை இராணுவத்தின் கட்டுபாட்டினுள் வைத்திருந்தால் உடனடியாக உரியவர்களிடம் கையளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இராணுவம் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குதல்.

  • இவ்வாறு விடத்தல்தீவு மற்றும் முள்ளிக்குளம் பகுதிகளில் மீனவர்களுக்கு
  • சொந்தமான உடமைகளை அதாவது மீன் வாடி வள்ளங்கள் போன்றவற்றை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது. இவை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

  • பாஸ் நடைமுறை மற்றும் இராணுவ அரசியல் தலையீடு மீனவர்கள் மீது திணிக்காதிருத்தல்.

(கலாச்சார அடக்குமுறை)
  • பௌத்த விகாரைகள், கோவில்கள் தொடர்ந்தும் நிறுவுதல் குறிப்பாக பௌத்தமக்கள் இல்லாத இடங்களில் சிங்கள மொழியை தமிழ் பேசும் மக்களிடையே அரசமொழியாக திணித்தல்.

  • பொருளாதாரத்தில் இராணுவத்தின் தலையீடு இல்லாதிருத்தல் உள்ளூர் பொருளாதாரத்தின் அபிவிருத்தியில் இராணுவத்தின் தலையீடுகளும் உள்ளூர் வர்த்தக நிலையங்கள் மற்றும் சிறு கடைகள் என்பனவைகளிலும்

  • மன்னார் கடலில் உல்லாச பிரயாணிகளுக்கான படகுச் சேவையிலும் கடற்படையினரின் தலையீடுகள் இல்லாதிருத்தல்.

(இராணுவமயமாக்கலலை விடுத்து சுமூகமான நிலைக்கு திரும்புதல்)
யுத்த சூழல் நீங்கி சமாதான காற்றை சுவாசிக்கின்ற மக்கள் மீண்டும்
அமைதியான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ள வேளையில் இராணுவத்தின் பிரசன்னம் ஆங்காங்கே காணப்படுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. பொருளாதார அபிவிருத்தி பொதுவான சிவில் நிர்வாகம் பாதிப்படைகின்றது.

நிலங்கள் வழங்குதல் அரச மற்றும் தனியார் நிலங்கள் தொடர்ந்தும் இராணுவ
ஆக்கிரமிப்பில் வைத்திருத்தல் தொடர்கின்றது. சட்டவிரோதமாக பெரும் தொகையான காடுகள் அழிப்புச் செய்யப்பட்டு சிவில் நிர்வாகம் இல்லாமல்
செய்யப்படுவதாக தோன்ற எண்ணுகிறது. ஆமைச்சர் றிசாட் பதியுதீன்
வழிகாட்டலின் கீழ் பெரும் தொகையான அரச காணிகள் துப்பரவு
செய்யப்படுகின்றது. முசலி கோட்டத்தில் சிலாபத்துறை மற்றும் முள்ளிக்குளம் வீதியில்.

(மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி மின்சாரத் தடை)

மன்னார் மாவட்டத்தில் பல காலம் தொட்டு இந்த பிரச்சனை தீர்க்க
முடியாதுள்ளது. பல தடவைகள் இது தொடர்பாக பல ஆர்ப்பாட்டங்கள்  மகஐர்கள் கையளிப்புக்கள் அரச மற்றும் தனியார் நிறுவன்னங்களால் நடாத்தப்பட்ட போதிலும் இது தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்றாகவே தொடர்கின்றது

(தொழில் சாலைகள் அமைத்தல்)
மன்னார் மாவட்டம் கைத்தொழிலில் தொடர்ந்தும் அபிவிருத்தி அடையாது
காணப்படுகின்றது. உரிய முறையில் கைத்தொழில்கள்  அபிவிருத்தி
செய்யப்படுமாயின் மன்னார், நானாட்டான் மற்றும் முசலி பிரதேசத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.

(பல்கலைக்கழங்களின் பிரிவுகளை நிறுவுதல்)
ஐ..சீ.ஈ உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை பெற்றுக் கொள்வதற்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சொந்த மாவட்டங்களிலேயே பல்கலைக்கழக கல்வியை தொடர பல்கலைக்கழக பிரிவுகளை (பொருத்தமான வளாகங்களை) நிறுவுதல் அவசியமாகிறது.

  • (வேலையற்ற பட்டத்தாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கல்)பல்கலைக்கழகங்கள் முடித்து வெளியேறிய பட்டத்தாரிகளுக்கு உரிய நியமனங்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் அவசியமாகிறது.

(முள்ளிக்குளம் மீள்குடியேற்றம்.)
முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த
அனைத்து மக்களும் யுத்தக் காலத்தில் இடம்பெயர்ந்து சென்றதும் அவர்களுடைய அனைத்து உடமைகளையம் கடைப்படையினரால் கையகப்பட்ட நிலையில் உள்ளது. மக்களின் வாழ்விடங்களில் கடைப்படையினரே உள்ளனர். இவ் மக்கள் தமது வாழ்விடங்களுக்காகவும் உடமைகளுக்காகவும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர். எனவே உடனடியாக இவ்விடத்தில் கவனம் செலுத்தி அம்
மக்களுக்கு நீதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளகின்றோம்.

(மன்னார் வைத்தியசாலை)
மன்னார் வைத்தியசாலையில் பல அத்தியாவசிய சிகிச்சைக்காக பல நவீன மருத்துவ தொழிநுட்ப சாதனங்கள் பற்றாக்குறையாக உள்ளது. அத்துடன் போதிய ஆளனியினர் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் மருத்துவ சிகிற்சைக்காக அயல் மாவட்டங்களுக்கு செல்ல  வேண்டிய அவல நிலை காணப்படுகின்றது.

எனவே இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என இவ்
மகஐரில் வேண்டப்பட்டுள்ளது.


மன்னாரின் குறைகளை நிறைகளாக மாற்றித்தருமாறு...மன்னார் பிரஜைகள் குழு ஐனாதிபதியிடம் முறையீடு. Reviewed by Author on October 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.