அண்மைய செய்திகள்

recent
-

இயக்குநர்களை திருமணம் செய்து கொண்ட நடிகைகள்! -


தமிழ் சினிமா நட்சத்திரங்களிடையே காதல் மலர்வதும் பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் இயல்பான ஒன்று.
அந்த வகையில் இயக்குநார்களை திருமணம் செய்து கொண்ட நடிகர்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்
பாக்யராஜ் - பூர்ணிமா
பாக்யராஜ் முதலில் பர்வீனா என்ற நடிகையை திருமணம் செய்திருந்தார் பாக்யராஜ் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
பிறகு 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு சாந்தனு மற்று சரண்யா என்று இரண்டு குழந்தைகள்.

சுரேஷ் மேனன் - ரேவதி
நடிகை ரேவதி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான சுரேஷ் மேனனை 1986ல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2002ம் ஆண்டு பிரிந்து வாழ துவங்கினார்கள்.

பார்த்திபன் - சீதா
இவர்கள் இருவரும் 1990ல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் 2001ம் ஆண்டு விவாரகத்து செய்துக் கொண்டனர்.

பொன்வண்ணன் - சரண்யா
பொன்வண்ணன் தனது சக நடிகையான சரண்யா அவர்களை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

மணிரத்னம் - சுகாசினி
சுகாசினியும் மணிரத்னமும் கடந்த 1988ல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு நந்தன் என்ற மகனும் இருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ணா வம்சி
பல விருதுகள் வாங்கி குவித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் இருக்கிறார்.

தேவயாணி - ராஜகுமாரன்
தேவயாணி தன்னுடன் ஏழு வருடங்கள் படங்களில் பணியாற்றிய ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்று இரண்டு குழந்தைகள்.

குஷ்பூ - சுந்தர் சி
நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

ரோஜா - செல்வமணி
ரோஜாவும், செல்வமணியும் நீண்ட காலம் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.

இயக்குநர்களை திருமணம் செய்து கொண்ட நடிகைகள்! - Reviewed by Author on October 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.