Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

பெண்களுக்கும் பெற்றோருக்கும் முக்கியமான அறிவிப்பும் எச்சரிக்கையும்....

மன்னார் மண்ணில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பாவனை மற்றும் மதுப்பாவனை புகைத்தல் போன்ற விடையங்களில் மாணவமாணவிகள் பெண்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர் அத்தோடு சிறுவர்சிறுமியரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

தற்போதைய பொருளாதார பிரச்சினையும் வேலையின்மையும் வறுமையும் சேர்ந்து இவ்வாறான சீரழிவுகளுக்கு காரணமாகின்றது என்றாலும் பலரின் அதித பேராசையாலும் கவனமின்மையாலும் எனக்கென்ன என்ற நிலையாலும் தான் இவ்வாறான பெரும்சீரழிவுகள் தினம் தினம் அரங்கேறுகின்றன….

ஒரு சிலரின் திடடமிட்ட செயலாலும் இனம்தெரியாத நபர்களாலும்……

காதல் என்ற போர்வையில் ஏமாற்றப்படும் பெண்கள்.......

பாடசாலை மாணவர்களும் இளம்பெண்களும் வயதுவித்தியாசம் இன்றி மாலை வேளையில் ஆள் நடமாற்றம் அற்ற இடங்களிலும் ஒழுங்கைகளிலும் மறைவாக நின்று நடந்தேறுகின்றது அசிங்கம்....

அசிங்கமான செயற்பாடுகள் அரங்கேறும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது….
 • தரவான் கோட்டை-ஒதுக்குப்புறங்கள்
 • தோட்டக்காடு-ஒதுக்குப்புறங்கள்
 • கீரி கடற்கரை
 • தாழ்வுபாடு கடற்கரை
 • சாந்திபுரம்-ஒதுக்குப்புறங்கள்
 • சௌத்பார்-ஒதுக்குப்புறங்கள்
 • மன்னார் பிரதான பாலத்திற்கு கீழ்பகுதியில்
 • ஆட்டோக்களில்..........
 • தனியார் மற்றும் அரசபேருந்து தரிப்பிடங்கள்(08மணிக்கு பின்பு)
 • புகையிரத கடவைகள் அருகில்-ஒதுக்குப்புறங்கள்
 • குளக்கரைகள்-ஒதுக்குப்புறங்கள்
 •  காமன்ஸ்  பொதுசேமக்காளை
 • ஆள்நடமாட்டம் இல்லாத வீடுகள்.ஒதுக்குப்புறங்கள்.இன்னும் இருப்பவை செல்லுபவர்களுக்குதான் வெளிச்சம்…
இங்கே நடப்பது காதல் அல்ல கலாசார சீரழிவுகள்.........
 • மாலைவகுப்புக்கள் தனியார் வகுப்புக்கள் பிரத்தியோக வகுப்புக்கள் என செல்லும் மாணவமாணவிகள் குறித்த நேரத்திற்கு வீடுகளுக்கு வருகின்றார்களா…???
 • உறவினர் வீடுகளுக்கு செல்வதாக சொல்லி செல்லும் போது….
 • மாணவமாணவிகளிடம் அதிகமான பணப்புழக்கம்.
 • நண்பர்கள் முறையற்ற சகவாசம்.
 • மரியாதை பயமற்ற நிலையும் விரக்தியும்.
 • கட்டுப்பாடற்ற தன்மையும் சுகந்திர எண்ணமும்
 • கல்வியில் விருப்பமின்மை தொழில் வாய்ப்பினமை
 • தொலைபேசி.மோட்டார்பைக் மோகம்.....
 • சுகபோகமாக வாழ நினைக்கும் இளம் ஆண்களும் பெண்களும்
 • காதலித்தால் தான் பெண் என்றும் குடித்தல் புகைபிடித்தால் தான் ஆண் என்றும் தவறான எண்ணங்கள்......
 • பெரியோர்களுக்கும் பெற்றோருக்கும் கீழ்படியாமைதான்.
 • உண்மையான காதல் என்றால் ஏன் காட்டுப்பகுதிக்கும் ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கும் ஏன் செல்ல வேண்டும்.
 • மதம்மாறி....இனம்மாறி காதலித்து தற்கொலைகளில் முடிந்த சம்பவங்கள் ஏராளம்.
 • மேலதிக வகுப்பிற்காக வீட்டிற்கு அழைத்து படிப்பித்த ஆசிரியரால் ஏற்பட்ட அவமானம்-ஞாபகம் இருக்குத்தானே.....
 • 6மணி கடந்த பின்பும் மறைவான பகுதிகளில் நின்று பேசும் காதல் ஜோடிகளிடம் இருந்து பணம் நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றது.
 • அத்தோடு பெண்களினை பாலியல் சீண்டல்கள்.......
 • கைத்தொலைபேசிகள் மூலம் படம் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுதல்.
 • காணமல் போதல்......தற்கொலை இன்னும் ஏன்......
 • நுண்நிதிக்கடன் பெற்ற குடும்பத்தினர் வீடுகளில் அத்துமீறி நுழையும் நபர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியாமல் தவிப்பு......
 • இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம் தினம் தினம் அரங்கேறும் சீரழிவுகளும் கொடுமைகளும்.
இவற்றினை எவ்வாறு தடுக்கலாம்
 • பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளோடு மனம் விட்டுப்பேசலாம்
 • பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளோடு நண்பர்களாக பழகுதல்
 • பிள்ளைகளின் நண்பர்களை அறிந்து வைத்திருத்தல்
 • பிள்ளைகளின் தேவைகளை உடனே பூர்த்தி செய்தல்
 • பிள்ளைகளுக்க தேவைக்கு அதிகமான பணத்தினை வழங்காது இருத்தல.;
 • பிள்ளைகளின் செயற்பாடுகளை அவதானித்தல்
 • பிள்ளைகள் யாரோடு எங்கு எப்பொழுது என்ன இருக்கின்றார்கள் பேசுகின்றார்கள் பழகுகின்றார்கள் என்பதை அறிந்து வைத்திருத்தல்.
 • பிள்ளைகளிடத்தில் கண்மூடித்தனமான நம்பிக்கையினை விட்டு ஏற்படும் மாற்றங்களை அவதானித்தல்.
 • பிள்ளைகள் தனிமைப்படுத்தலும் தனிமையில் இருப்பதையும் தவிர்ப்பதோடு தனியறையில் பிள்ளைகள் தொலைபேசி கணணிகளில் செலவிடும் நேரத்தினை குறைத்தல் வெளிப்படையாக வைத்தல்.

பெரியோர்கள் ஆசிரியர்கள் எங்கு எப்பொழுதும் மாணவமாணவிகளை இளைஞர் யுவதிகளை முறையற்ற இடங்களில் முறையற்ற நேரங்களில் கண்டாலோ நிண்டாலோ கேளுங்கள் விசாரியுங்கள் தகுந்த நடவடிக்கையை உடனே எடுங்கள் எனக்கென்ன என்று நீங்கள் இருந்தால்........... நாளை பெரும்பாதிப்புக்கு உள்ளாகப்போவது உங்களின் மகளோ…மகனோ…உறவுக்கார்களோ…யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அக்கறையுடன் இருக்க வேண்டியவர்கள்
 • அரச அதிகாரிகள்
 • பொலிஸ் அதிகாரிகள்
 • சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள்
 • பொறுப்புள்ள இளைஞர்கள்
 • சமூக ஆர்வலர்கள்
 • பெரியோர்கள் புத்திஜீவிகள் இன்னும் பொறுமையாக இருப்பதை விட்டு புறப்படுங்கள்......ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்....
 மேடைப்பேச்சில் கலாசாரத்தினையும் சமூகத்தினையும் பாதுகாக்கும் அரசியல் வாதிகளே....நீங்களும் கொஞ்சம் கீழே பருங்கள் இளைய சமுதாயம் எவ்வாறு சீரழிக்கப்படுகின்றது.....

அவதானமாய் இருப்போம்..................
அன்பாய் இருப்போம்...........................
அசம்பாவிதங்களை தடுப்போம்…..............

மன்னாரில்  நடக்கும் அனைத்து கொடுமைகளுக்கும்  தீர்வாக  ஒர் இளைஞர் அணி உருவாகின்றது….விரைவில்......

நடக்க முன் எச்சரிக்கையாக இருத்தல்  நல்லது….
நடக்கும் போதும் கண்டு கொள்ளாமல் இருப்பது கொடிதிலும் கொடிது…


பெற்றோருக்கு அடங்காத பிள்ளைகள்.....வீட்டுக்கு கேடு....
 ஆசிரியர்களுக்கு அடங்காத பிள்ளைகள்......நாட்டுக்கு கேடு .....
-மன்னார்விழி-
பெண்களுக்கும் பெற்றோருக்கும் முக்கியமான அறிவிப்பும் எச்சரிக்கையும்.... Reviewed by Author on October 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.