அண்மைய செய்திகள்

recent
-

சவுதி அரேபியாவில் 13,000 இந்தியர்கள் உயிரிழப்பு:


ஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 28,523 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஐக்கிய அமீரக நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் சிலர் சாலை விபத்துகளிலும், உடல் நலக்குறைவாலும், தற்கொலை செய்தும் மரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய அமீரக நாடுகளில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து இந்திய பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வெளிவிவகாரத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்,
கடந்த நான்காண்டுகளில் ஐக்கிய அமீரக நாடுகளில் 28,523 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட இந்த நான்காண்டுகளில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் 12,828 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக துபாய் உள்ளிட்ட நாடுகளில் 7,877 பேரும், குவைத்தில் 2,932 பேரும், ஓமனில் 2,564 பேரும், கத்தாரில் 1,301 பேரும், பஹ்ரைனில் 1,021 பேரும் மரணம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் வளைகுடா நாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை மிக அதிகபட்சமாக 6,013 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் 13,000 இந்தியர்கள் உயிரிழப்பு: Reviewed by Author on December 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.