அண்மைய செய்திகள்

recent
-

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்


மன்னார் மாவட்டத்தில் தற்போது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மழையினாலும் தேங்கி நிற்கின்ற வெள்ளத்தினாலும் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகமாகி அது மக்களின் உயிரைப்பறிக்கும் அளவிற்கு சென்றுகொண்டு இருக்கின்றது நாம் தெளிவின்மையினாலும் விளிப்புணர்வற்றவர்களாய் இருக்கின்றோம்…..

இன்று கொடிய டெங்கு நோயினை பரப்பும் டெங்கு நுளம்பின் பெருக்கத்தினை கட்டுப்படுத்தவும் இல்லாது அழிக்கவும் புகையூட்டல் மற்றும் இதர செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. மக்களாகிய நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்…..

சமீபத்தில் டெங்கு  நுளம்பு பெருக்கத்தினால்  அநியாயமாக  ஒரு உயிரை இழந்துள்ளோம் சிந்தியுங்கள் மக்களே......

மன்னார் சுகாதாரதினைணக்களம்-பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்
மன்னாரில் டெங்கு நோய் தீவிரமாக அதிகரித்துள்ளமையினால்
உங்கள் வளவுகளில் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து விடுங்கள்
கவனிப்பு அற்று உள்ள வளவுகளை துப்பரவு செய்யுங்கள்.

இரண்டு மூன்று நாட்களிற்கு மேல் காய்ச்சல் காணப்படின் தகுந்த வைத்திய ஆலோசனையை பெறுங்கள்.

உடல் வலி காச்சல் ஏற்படும் போது புறுபான்-அஸ்பிரின் போன்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.

பரசிற்றமோல்(பனடோல்)பாவிக்கும் போது வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்ப உரிய அளவினை மட்டும்பாவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

"சுத்தம் பேணுவோம் சுகமாய் வாழ்வோம்"

தகவல்-சுகாதாரதினைணக்களம்-மன்னார்-

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by Author on December 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.