அண்மைய செய்திகள்

recent
-

கஜா புயல் பாதிப்பு.. தமிழக மக்களுக்கான நிதியுதவியை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம் -


கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக டெல்டா மாவட்டத்தில் வசிக்கும் 17,500 பேருக்கு நன்மை கிடைக்கும் அளவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது கடந்த மாதம் 16ம் தேதி கஜா புயலாக மாறி கோரத்தாண்டவமாடியது.
இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. தங்களுடைய அன்றாட வாழ்க்கையினை இழந்த பொதுமக்கள் இன்று வரை அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

தன்னார்வலர்கள் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாகனங்களில் ஏற்றி அவர்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்திற்கு நிதி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதில், ஐரோப்பிய ஒன்றியத்தால் அளிக்கப்படும் 105,000 யூரோ செஞ்சிலுவை சங்கம் சங்கங்களின் மூலம் பொதுமக்களை சென்றடையும். நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 17,500 பேருக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த நிதியுதவி பயன்படும் என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தமிழக அரசின் அறிக்கைபடி, 120கிமீ வேகத்தில் வீசிய கஜா புயலால் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு 2,50,000 மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மேலும், 1,17,000 க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கஜா புயல் பாதிப்பு.. தமிழக மக்களுக்கான நிதியுதவியை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம் - Reviewed by Author on December 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.