அண்மைய செய்திகள்

recent
-

புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்ரி உள்ளடக்கப்பட்டுள்ளது போன்ற -சிவசக்தி ஆனந்தன்MP-(படம்)

புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்ரி உள்ளடக்கப்பட்டுள்ளது போன்ற   பொய்யான பல்வேறு பிரச்சாரங்கள் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  செயலாளர்  சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் வைத்து, கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபையின் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் மற்றும்,வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்   இன்று ஞாயிற்றுக்கிழமை(30) மாலை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,

-எமது கட்சியை சேர்ந்த பல்வேறு தரப்பினர்களுடன் சமகால அரசியல் நிலமை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, எதிர்வரும் மார்ச் மாதம் இடம் பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம் பெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் எதிர் வருகின்ற சுதந்திர தினத்திற்கு முன்பாக புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்பட இருக்கின்றது என்ற செய்தியை கொண்டு வர இருக்கின்றார்.

எங்களைப் பொறுத்த வரையில் 2019 ஆம் ஆண்டில் பல்வேறு   முக்கியமான தேர்தல்கள் இடம் பெற இருக்கின்றது.
-மாகாண சபைத்தேர்தல், பாராளுமன்றத்தேர்தல் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில், கடந்த மூன்றரை வருடங்களாக (3ஃ12) இந்த புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படுகின்ற இந்த புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்ரி உள்ளடக்கப்பட்டுள்ளது போன்ற இந்த பொய்யான பல்வேற பிரச்சாரங்கள் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளனர்.

உண்மையிலேயே புதிய அரசியல் அமைப்பு என்பது ஜனாதிபதியும், பிரதமரும் திரும்பத்திரும்ப ஒரு செய்தியை சொல்லுகின்றார்கள்.

-இது ஒரு ஒற்றையாட்சியை உள்ளடக்கியதாக புதிய அரசியல் யாப்பு இருக்கின்றது.

-கடந்த வெள்ளிக்கிழமை கூட (28) மகாநாயக்க தேரர்களைக்கூட பிரதம மந்திரி அவர்கள் சந்தித்த போது கூட புதிய அரசியல் அமைப்பிற்கு கூடாக பௌத்த மதத்திற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

-அதே போல் ஒற்றையாட்சியையே இந்த நாடு கொண்டிருக்கின்றது என்ற செய்தியை கூறுகின்றதன் பிற்பாடு கூடு, இந்த புதிய அரசியல் அமைப்பு எதிர் வருகின்ற சுதந்திர தினத்திற்கு முன்பாக கொண்டு வரப்படுகின்றது என்கின்ற செய்தியானது மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினை மீண்டும் இவர்களும், தற்போதைய அரசும் சேர்ந்து ஏமாற்றி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த விதமான உரிமைகளையும் பெற்றக்கொள்ள முடியாது என்கின்ற நிலைக்கே இவர்கள் இட்டுச் செல்கின்றார்கள் என்கின்ற நிலையையே நான் கூற விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.






புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்ரி உள்ளடக்கப்பட்டுள்ளது போன்ற -சிவசக்தி ஆனந்தன்MP-(படம்) Reviewed by Author on December 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.