அண்மைய செய்திகள்

recent
-

பரபரப்புக்கு மத்தியில் மைத்திரி எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம்? -


புதிய கூட்டணி ஆட்சிக்கோ அல்லது சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவோ அனுமதிக்காதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உச்சநீதிமன்றம் இன்று மாலை அறிவித்திருந்தது.

இந்நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலும் நாளைய தினம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றின் தீர்ப்பு வெளியானதும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே, புதிய கூட்டணி ஆட்சிக்கோ அல்லது சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவோ அனுமதிக்காதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமன இடைநிறுத்தத்துக்கு எதிராக மகிந்த தரப்பு செய்துள்ள மேன்முறையீடு நாளை உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டால் புதிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரபரப்புக்கு மத்தியில் மைத்திரி எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம்? - Reviewed by Author on December 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.