அண்மைய செய்திகள்

recent
-

பெரும்பான்மை கிடைக்காமைக்கு காரணம் என்ன? மைத்திரி வெளியிட்ட பரபரப்புத் தகவல் -


நாட்டில் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், மஹிந்தவுக்கு ஆதரவாக பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவுக்கு அந்த பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் இதுவரை அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகமொன்றுக்கு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பேரம் பேசுதலில் ஏற்பட்ட விலை அதிகரிப்பே அதற்கு காரணமாகும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மனு கோரல் போன்று ஒன்று நடத்தப்பட்டது என்றே கூற வேண்டும்.
சில உறுப்பினர்கள் 500 மில்லயன் ரூபாய் கோரியதாக எனக்கு தகவல் கிடைத்தது. மஹிந்தவுக்கு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாமல் போனதற்கு அதிகளவான விலைகளே முக்கிய காரணமாக இருந்திருக்கும் என நான் நினைக்கின்றேன்.

விலை அதிகரிப்புகளினால் 113 என்ற பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.
மஹிந்தவினால் குறித்த 113 என்ற பெரும்பான்மையை பெற்றிருக்க முடிந்திருந்தால் ஒன்றரை மாத கால அரசியல் பிரச்சினை, நெருக்கடி மற்றும் பதற்ற நிலைமைகள் ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை கிடைக்காமைக்கு காரணம் என்ன? மைத்திரி வெளியிட்ட பரபரப்புத் தகவல் - Reviewed by Author on December 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.