அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களின் செயற்பாட்டால் கிளர்ந்தெழுந்த மக்கள்

"தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றும் நடவடிக்கையை தடுத்து, தமிழ் - முஸ்லிம் இன ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி இன்று களுவன்கேணியில் ஆர்பாட்ட பேரணி நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு - களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நுற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுரைக்கமைய இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றி சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேண்டாம் வேண்டாம் மதம் மாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டாம், விழித்துக்கொள் தமிழா முஸ்லிம்களின் மதமாற்றத்துக்கு எதிராக உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவியின் தந்தை வேலுப்பிள்ளை கிருஸ்ணகுமார் கருத்து தெரிவிக்கையில்,
இந்த பாடசாலையில் உள்ள இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆசிரியர்கள் எனது மகளுக்கு மூளைச் சலவை செய்து மதமாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
எனது மகளை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த விடயத்தில் இஸ்லாமிய மத தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். எனது மகள் வீடு திரும்பாவிடின் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கும் நிலை ஏற்படும்.
அந்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மத ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவியிடம் கையளித்துள்ளனர்.
கோரிக்கை அடங்கிய மனுவினை பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த வியடம் தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆசிரியர்களிடம் முதற்கட்ட விசாரணைகளையும் நடத்தியுள்ளோம்.
மாணவியின் பொற்றோருடனும் கலந்துரையாடியுள்ளோம், விபரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் உத்தரவுக்கமைய நடவடிக்கையெடுக்கவுள்ளோம்.

தமிழ் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களின் செயற்பாட்டால் கிளர்ந்தெழுந்த மக்கள் Reviewed by Author on January 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.