அண்மைய செய்திகள்

recent
-

எம்மிடையே சகோதரத்துவம் நிலைக்க வேண்டும்-ஜெர்மன் நாட்டு பேராயர் அதிமேதகு லூட்விங் சிக் ஆண்டகை-படங்கள்

 நாங்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இறைவன் எம்
ஒவ்வொருவரையும் மனிதாக வாழ எம்மை அழைத்துள்ளார். சகோதரத்துவத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக அந்த அழைத்தல் உறுதிப்படுத்தப்படுகிறது.
சமயங்கள் மற்றும் இனங்களுக்கிடையே இருக்கின்ற முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒற்றுமை அவசியமானது என மன்னாருக்கு வருகை தந்த ஜெர்மன் நாட்டு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் அதிமேதகு லூட்விங் சிக் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

இழப்புக்கள் பிரச்சனைகள் கொண்ட நாடுகளுக்கு தரிசித்து அங்குள்ள நன்மை
தீமைகளை அறிந்து கொள்வதற்காக பல நாடுகளுக்கு விஐயத்தை மேற்கொள்வதுபோல் இலங்கை நாட்டிலும் மக்கள் கொண்டுள்ள நிலமைகளை அறிந்து கொள்வதற்காக இலங்கை நாட்டுக்கு ஜெர்மன் நாட்டு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் அதிமேதகு லூட்விங் சிக் ஆண்டகை  தலைமையில் கொண்ட குழு மன்னார் மாவட்டத்துக்கும் சனிக்கிழமை (05.01.2018) விஐயத்தை மேற்கொண்டது.

இவ் குழு மன்னார் ஆயரைச் சந்தித்ததுடன் இதைத் தொடர்ந்து மன்னார்
வாழ்வோதயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, தலைமையில் நடைபெற்ற கருத்தமர்வில்  மன்னார் மாவட்ட சர்வமத தலைவர்கள், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு பிரதிநிதிகள், குரு முதல்வர், சிறுவர் பராமரிப்பு அதிகாரிகள் மற்றும் வாழ்வோதயம் இயக்குனர் அதன் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு ஆயர் லூட்விங் சிக் ஆண்டகை  தொடர்ந்து உரையாற்றுகையில் நான் வருகை தந்தபொழுது அனைத்து மதத் தலைவர்களும் இங்கு ஒன்றுசேர்ந்து என்னை அன்புடன் வரவேற்றமைக்காகவும் ஜெர்மன் நாட்டு திருச்சபை என்ற வகையிலே நான் உங்களை பாராட்டுவதாகவும் அத்துடன்  நன்றியைத் தெரிவித்தவானக நான் எனது உரையை ஆற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஜெர்மன் நாட்டு பேராயரும், அவ்நாட்டின்  ஆயர் பேரவையின் தலைவரும்,
இதேவேளையில் அங்குள்ள நீதி சமாதான மனித உரிமை அமைப்புக்கு தலைவராக இருக்கும் நான் உங்களுக்கு ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்
.
திருச்சபையை நோக்கும்பொழுது நான்கு அங்கங்கள் கொண்ட ஆணைக்குழுக்கள் இயங்குவதாகவும் காணப்படுகின்றன. இதில் ஒன்று நீதி சமாதானத்துக்காகவும், மற்றையது மறைப்பரப்பு விடயமாகவும், மற்றையது அபிவிருத்தி மற்றும் மனித நேயத்தை கொண்டு செயல்படும்   செயல்பாடாக இருக்கின்றன.

நாங்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இறைவன் எம்
ஒவ்வொருவரையும் மனிதாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இந்த அழைப்பு  சகோதரத்துவத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக அந்த அழைத்தல் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த வகையில் இந்த அழைப்புக்கு
செவிசாய்த்து இங்கு இருப்பதில் நான் பெருமை அடைகின்றேன்.

ஒருவருக்கொருவர் நாம் உதவி செய்வதும் ஒருவருக்கொருவர் எமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதும் மனிதத்துவத்தின் ஒரு சாயல் ஆகும்.

இதன் மூலம் சமயங்கள் மற்றும் இனங்களுக்கிடையே இருக்கின்ற முரன்பாடுகளை தீர்ப்பதற்கு இந்த ஒற்றுமை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள உதவ செய்ய எங்களுடைய மனித விழுமியங்களை மேம்படுத்துவதற்கான நம்பிக்கை பிறக்கும்.

நாங்கள் ஏன் இங்கு வந்திருக்கின்றோம்? இனங்கள் முறண்பாடுகள் சமய
முறண்பாடுகள் சந்திக்கின்ற நாடுகளுக்கு நாங்கள் விஐயம் செய்து அங்கு
நிகழ்ந்தவற்றை அவர்களின் சரித்திர பின்னனிகளை அவர்களிடமிருந்து
பெறப்படுகின்ற முன்மாதிரிகளை  அவர்களிடமிருந்து அறிந்து பெற்றுக்
கொள்ளும் நோக்குடனே இங்கும் நாங்கள் இந்த விஐயத்தை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

இங்கு என்னுடன் பயணித்து வந்திருக்கும் உறுப்பினர்கள் நீதி
சமாதானத்துக்காக உழைப்பவர்களாக இருக்கின்றார்கள் என தன்னுடன்
வந்திருந்தவர்களை ஐந்து பேரையும் சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்தார்.

நாம் எமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதன் மூலம் எமது திருச்சபை ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்தது. அதேவேளையில் இங்குள்ள திருச்சபை அந்தளவுக்கு பழைமை வாய்ந்ததாக இல்லாவிட்டாலும் உலக திருச்சபைக்கு எங்களால் பகிர்ந்து கொடுப்பதற்கான அனுகூழங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

மதங்களுக்கிடையே கலந்துரையாடல் எங்கள் மறைமாவட்டத்திலும் மற்றும் ஏனைய மறைமாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாங்கள் பல அனுபவங்களை பெற்று வருவதாகவும் இதனால் நாங்கள் எங்கள் மனிதத்துவத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.

மேலும் என்னையும் என்னைச் சார்ந்த குழுவையும் மிகவும் அன்புடன் இங்கு
வரவேற்ற மன்னார் ஆயருக்கும் சர்வமத தலைவர்களுக்கும் மற்றும்
ஏனையவர்களுக்கும் தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இவ் ஆயர் கொண்ட குழு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் ஆண்டகை சகிதம் தங்கள் சொந்த கிராமத்துக்குள் இருக்க அனுமதிக்கப்பட்டபோதும் தங்கள் நிலங்களில் வீடுகளில் கடற்படையினரின் ஆக்கிரமிப்பால் செல்லமுடியாது தவிக்கும் முள்ளிக்குள மக்களை சந்தித்ததுடன் மற்றும் மடு ஆலயத்துக்கும் விஐயங்களை மேற்கொண்டனர்.

இவ் பேராயர் குழு இலங்கையின் ஏனைய மறைமாவட்டங்களுக்கும் தங்கள் விஐயங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
 











எம்மிடையே சகோதரத்துவம் நிலைக்க வேண்டும்-ஜெர்மன் நாட்டு பேராயர் அதிமேதகு லூட்விங் சிக் ஆண்டகை-படங்கள் Reviewed by Author on January 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.