அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் நாட்டுக்கு உலகளாவிய ரீதியில் கிடைத்த அங்கீகாரம்! -


உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது.
அண்மையில் வெளியிட்டப்பட்ட ஆய்வு அறிக்கைக்கு அமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.

Y&R’s BAV மற்றும் Wharton ஆகியவற்றுடன் அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை இணைந்து நடத்திய ஆய்விற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா, ஆபிரிக்க உள்ளிட்ட 80 நாடுகளிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
65 விடயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளி வழங்குமாறு இந்த நபர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
குடியுரிமை, கலாச்சார தாக்கம், முயற்சியான்மை, மரபுரிமைகள், வர்த்தகம், மின்வலு எரிசக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகிப்பதுடன், உலகின் மிகச் சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தை வகிக்கின்றது.
உலகளாவிய ரீதியில் கனடாவில் அதிகளவான இலங்கையர்கள் வாழ்கின்றனர். இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மாத்திரம் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாகும். ரொரண்டோ, ஒன்டாரியோவில் அதிகளவான தமிழர்கள் வாழ்கின்றனர்.

கனடாவில் பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 16வது பேசும் மொழியாக தமிழ் உள்ளமை விசேட அம்சமாகும். பல வீதிகளுக்கு இலங்கையை பிரதிபலிக்கும் பெயர்கள் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் சுவீடன் இரண்டாமிடத்தையும், டென்மார்க் மூன்றாமிடத்தையும் நோர்வே நான்காமிடத்தையும், சுவிட்சர்லாந்து ஐந்தாமிடத்தையும் பிடித்துள்ளது.
ஐக்கிய ராஜ்ஜியம் 12ம் இடத்தையும் பிரான்ஸ் 16ம் இடத்தையும் ஐக்கிய அமெரிக்கா 17ம் இடத்தையும் பிடித்துள்ளன.
இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் நாட்டுக்கு உலகளாவிய ரீதியில் கிடைத்த அங்கீகாரம்! - Reviewed by Author on January 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.