அண்மைய செய்திகள்

recent
-

மலையக தோட்ட தொழிலாளா்களுக்கு ஆதரவாக கறுப்புச் சட்டை அணிவேன்! வட மாகாண ஆளுநரின் புதிய முடிவு -


மலையக தோட்ட தொழிலாளா்களின் 1000 ரூபாய் சம்பள உயா்வு கோரிக்கைக்கு ஆதரவாக வட மாகாணத்திலிருந்து 10 ஆயிரம் கையொப்பங்களை பெற்று அரசுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளார்.

மலையக தோட்ட தொழிலாளா்களின் 1000 ரூபாய் சம்பள உயா்வுக் கோரிக்கை தொடா்பாக வடமாகாண உள்ளுராட்சி அமைச்சு கேட்போர் கூடத்தில் ஆளுநா் சுரேன் ராகவன் நடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது ஆளுநா் மேலும் கூறுகையில்,

150 வருடங்களாக மலையக தோட்ட தொழிலாளா்களின் வாழ்வில் தேவையான அளவு மாற்றங்கள் எவையும் உண்டாக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள மற்றைய தமிழ்பேசும் சமூகங்களை காட்டிலும் மலையக தமிழா்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றார்கள். இப்போது அவா்கள் 1000 ரூபாயாக தமது சம்பவத்தை அதிகரிக்கும்படி கேட்கிறார்கள்.

அதனால் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தில் இப்போது சீவிக்க முடியுமா? ஆகவே எந்த நிபந்தனையும் இல்லாமல் சம்பள உயா்வு அந்த மக்களுக்கு வழங்கப்படவேண்டும். தமது உழைப்பையும், உடலையும் தேயிலை தோட்டங்களுக்கு கொடுத்து க் கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டும்.
அவா்களுக்காக பொது அமைப்புக்கள், சமூக ஆா்வலா்கள் இணைந்து போராட்டங்களை நடாத்தவேண்டும். வடமாகாண மட்டத்தில் நாம் மலையக மக்களுடைய சம்பள உயா்வு கோரிக்கைக்கு ஆதரவாக சுமார் 10 ஆயிரம் கையெழுத்துக்களை பெற்று அரசுக்கு அனுப்புவதற்கு தீா்மானித் திருக்கிறோம்.

அதேபோல் 1000 ரூபாய் சம்பள உயா்வை வழங்கு என்ற பதாகைகளை சட்டையில் அணிவதுடன், பொது நிகழ்வுகளில் கறுப்பு சட்டை அணிந்து மலையக மக்களுடைய சம்பள உயா்வு கோரிக்கைக்கு வலுச்சோ்ப்பதற்கு நாங்கள் தொடா்ச்சியாக குரல் கொடுப்போம்.
அதனைவிடவும் 10 ஆயிரம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கைகளை இன்றே ஆரம்பிப்பதற்குமான நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம் என்றார்.
மலையக தோட்ட தொழிலாளா்களுக்கு ஆதரவாக கறுப்புச் சட்டை அணிவேன்! வட மாகாண ஆளுநரின் புதிய முடிவு - Reviewed by Author on February 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.