அண்மைய செய்திகள்

recent
-

இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை! அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம்- எச்சரிக்கும் மைத்திரி -


தேசிய இனப்பிரச்சினைக்கோ, நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கோ இதுவரையில் காத்திரமான தீர்வு திட்டமொன்று எட்டப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கையின் 71ஆவது தேசிய தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கொழும்பு காலிமுகத் திடலில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், சுதந்திரத்திற்கு முன்னதாக காணப்பட்ட வெளிநாட்டு மேலாதிக்கம் இன்னமும் தொடர்கின்றது. அது வேறு வடிவங்களில் நீடிக்கின்றது.

நாடு சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அரசியல்வாதிகள் பேசிய போதிலும் இதுவரையில் தீர்வு எட்டப்படவில்லை.
தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குதவற்கு தற்போதைய அரசாங்கம் முனைப்பு காண்பித்து வருவதாக தகவல்களை காணக் கிடைத்தது.
நாட்டுக்கு தேசிய அரசாங்கம் தற்பொழுது தேவையில்லை. அதனை நாம் நிராகரிப்போம். 2015ஆம் ஆண்டில் உருவாக்கிய தேசிய அரசாங்கம் எதைச் செய்யக் கூடாதோ அவற்றை மட்டுமே செய்தது.

எவ்விதமான நல்ல காரியங்களையும் செய்யவில்லை என அவர் கடுமையான விமர்சனமொன்றை முன்வைத்துள்ளார்.
அத்துடன் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனமும் கேள்வி எழுப்பவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், ஊழல் மோசடிகள் மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை! அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம்- எச்சரிக்கும் மைத்திரி - Reviewed by Author on February 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.