அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி திருவிழாவிற்கு 400000 பக்தர்கள் எதிர்பார்ப்பு-புகையிலை பொலித்தீன் பாவனை முற்றாக தடை


இம்முறை திருக்கேதீஸ்வரம்  சிவராத்திரி திருவிழாவிற்கு நான்கு லட்சம் பக்தர்கள் எதிர்பார்ப்பு புகையிலை பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான மீளாய்வு கூட்டத்தில் தீர்மானம்

எதிர்வரும் 04-03-2019 திருக்கேதீஸ்வரத்தில் நடைபெறவுள்ள சிவராத்திரி விழா தொடர்பான மீளாய்வு கூட்டம் மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் திருக்கேதீஸ்வரம் சம்பந்தர் மடத்தில் 28-03-2019 காலை 10-00 மணிக்கு ஆரம்பமானது

இதில் இதில் பாதுகாப்பு சுகாதாரம் போக்குவரத்து குடிநீர் போன்ற முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு உரியவர்களிடம்  பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது

பாதுகாப்பிற்காக 500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 500 சாரணர்களும் கோரப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் 130 மலசலக் கூடங்களே உள்ளது வரும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பாவிப்பதற்கு மலசலக்கூடங்கள் தேவை என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.  மன்னார் மாவட்டத்தில் தீயணைப்பு படை இல்லை தற்காலிகமாக  சேவை மனப்பான்மையுடன் வவுனியாவில் இருந்து கட்டணம் இல்லாமல் வருவதற்காக அலுவலகத்துடன் பேசிப்பார்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது

சாதாரண நாட்களை விட திருவிழா காலங்களில் மின் பாவனை அதிகம் தேவைப்படுகிறது புதிதான மின் மாற்றி பொறுத்தி சேவை வழங்குவது சாத்தியமில்லை அதனால் மின்சார சபையினால்  அதிக சக்தி மின்வலு சக்தி கொண்ட ஜெனரேட்டர்  கொண்டு மேலதிக மின்தேவை  பூர்த்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

போக்கு வரத்திற்கென இலங்கை போக்குவரத்து சேவை 80 பேரூந்துகளையும் தனியார் பேரூந்து சேவை 87 பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் இந்த வருடம் நடைபெற இருக்கும் சிவராத்திரி விழாவிற்கு நான்கு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் எதிர்பார்ப்பதாகவும் ஆலயப்பகுதிகளில் புகை மற்றும் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்யப்படும் என்று தெரிவித்தார்கள்

சிவராத்திரி மீளாள்வு கூட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாவட்ட செயலர் சி.ஏ. மோகன்றாஸ் அவர்கள் மன்னார் மாவட்டத்தை அடையாளப்படுத்துவதில் திருக்கேதீஸ்வரமும்  ஒன்று  ஒவ்வொரு வருடமும் மிகச்சிறப்பாக நடைபெறும் சிவராத்திரி இந்த முறை முன்பை விட அதிக சிறப்பாக நடைபெற அனைவரும் உளமாற சேவை செய்ய வேண்டும் துளியளவு குற்றம் குறைகள் வந்துவிடக் கூடாது ஏனெனில் வெளிமாவட்டங்களில் இருந்து அதிக மக்கள் வருகை தருவார்கள் அவர்களுக்கு இடையுறு இல்லாமல் பாதுகாக்க வேவண்டும்.

மக்களுக்கு  தேவையான பாதுகாப்பு சுகாதாரம் குடிநீர் போக்குவரத்து மின்சாரம் போன்றவைகளில் எந்த இடையூறுகளும் இல்லாமல் வழங்க வேண்டும் அவை சம்பந்த பட்ட திணைக்களங்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது  சம்பந்த பட்ட திணைக்களங்கள் அவற்றை கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த மீளாய்வு கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் திருக்கேதீஸ்வரம் ஆலய சபை செயலாளர் பொறியயலாளர் இரமகிருஷ்ணன்  மன்னார் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்கள் மன்னார் பிரதேச சபை தலைவர் முஜாஹிர் மடு பிரதேச செயலாளர் பி.ஜெயகரன்   மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி திருக்கேதீஸ்வரம் திருப்பணிச் சபையினர் பொலிஸ் இரானுவ அதிகாரிகள் மற்றும் அனைத்து திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.






திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி திருவிழாவிற்கு 400000 பக்தர்கள் எதிர்பார்ப்பு-புகையிலை பொலித்தீன் பாவனை முற்றாக தடை Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.