அண்மைய செய்திகள்

recent
-

மதநல்லிணக்கத்தை நியூசிலாந்து நாட்டிடமிருந்து கற்றுக்கொள்வோம்.


மதநல்லிணக்கத்தைநியூசிலாந்துநாட்டிடமிருந்துகற்றுக்கொள்வோம்

கடந்த இரு வாரங்களில் நடைபெற்ற இரு பள்ளிவாசல்களில்ääதனிமனிதர் ஒருவரினால் நடைபெற்றபடுகொலையைஅடுத்துääமதநல்லிணக்கம் பேசும் எமது இலங்கைநாட்டில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பலபடிப்பினைகளைஅறிந்து இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எனது நாட்டிலும் ஒரளவானது மத/சமூக/ இன நல்லிணக்கத்தைபேணுவோம்.

•    முழு நாடும் படுகொலைசெய்யப்பட்ட முஸ்லீம் மக்களுக்காக கவலைகொண்டதுடன் தமது கவலையை பலவழிகளில் வெளிப்படுத்தினர்.
•    கொலையாளிதமதுநாட்டுவெள்ளை இனம் எனதெரிந்தும் முழு மக்களும்ääஅவனுக்கெதிராககுரல் கொடுத்தனர். மேலும் இச்செயல் ஒர் தீவிரவாதம் எனஒரேகுரலில் மொழிந்தனர்.
•    அரசாங்கம் 50மேற்பட்ட இறந்த முஸ்லீம் ஜனாசக்களை மதமுறைப்படி அடக்கம் செய்து முழு செலவையும் அரசசெலவில் நடத்தினர்;.
•    அரசாங்கம் வதந்திபரப்புவர்களுக்கும்/செய்திகளை/இணையத்தளங்கள் மூலமாகவும்/ ஏனைய நவீன ஊடகங்கள் மூலமாகவும்ääபரப்புவதை அடுத்த ஒருமணித்தியாலத்திலே தடைசெய்ததுடன் அவர்களுக்கு 14 வருடங்கள் சிறைதண்டணையும் விதித்தது.
•    தானியக்கிதுப்பாக்கிகளுக்குஅரசு தடைவிதித்தது.
•    நூற்றுக்கணக்கானமக்கள் ஏனைய நாடுகளிலும்/நியூலாந்திலும் இருந்துபள்ளிவாசல்களுக்குஉடன் வருகைதந்து/ தத்தமதுமதஅனுஸ்டானங்களை அனுசரித்ததுடன் தமதுசோகத்தையும் வெளிப்படுத்தினர்.
•    ஆயிரக்கணக்கானமக்கள் வெள்ளைääகறுப்புஉடைஅணிந்துசோகத்துடன் பூக்கொத்துக்களை இரு பள்ளிவாசல் சுற்றுவட்டாரத்தில் வைத்ததுடன் மெழுகுவர்த்திகளை இரவிரவாககொழுத்தினர்
•    கிவி இனமக்களும்/நியூசிலாந்துமக்களும் சகலபள்ளிவாசல்களுக்கும் பூரணபாதுகாப்புவழங்கியதுடன் அனுதாபம்தெரிவிக்கவந்தவர்களுக்கு முழு ஒத்துழைப்புவழங்கினார்.
•    பள்ளிவாசலுக்குஅருகில் இருந்தகீறிஸ்தவமக்கள் தமதுவீட்டுகதவுகளைஅனுதாபம் தெரிவிக்கவந்தவெளியிட முஸ்லீம் மக்களுக்காகதிறந்துவிட்டதுடன்அவர்களுக்குநீரும்ääஉணவும் வழங்கினர்.
•    நியுசிலாந்துபாராளுமன்றத்திற்குபள்ளிவாசல் இமாம் ஒருவரைவரவழைத்துமதபிரார்த்தனையுடன் பாராளுமன்றசெயற்பாட்டை தொடங்கினர். இது இந்நாட்டில் முதல் தடவையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
•    மேலும் தேசியதுக்கம் அனுஸ்டித்துசகலகேளிக்கைநிகழ்வுகளும் ஒருமாதத்திற்குதடைசெய்யப்பட்டுசகலதேசியகொடிகளும்அரைகம்பத்தில்பறக்கவிடப்பட்டன.
•    கிவி இன மக்கள் அருகிலுள்ளதிறந்தவெளிääகடற்கரைபோன்ற இடங்களில் ஒன்றுகூடிசோககீதங்கள் இசைத்துடன்ää இறந்தவர்களுக்காகஒவியங்கள் வரைந்துääமலர் வளையங்களைவைத்து அஞ்சலிசெலுத்தினர். இதன் மூலம் அவர்கள் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆத்மாந்த அஞ்சலிகளை செலுத்தினர்.


•    மேலும் ஏனைய மதத்தினர் முஸ்லீம் இல்லங்களைதரிசித்து/ நல்லுறவையும் ஏற்படுத்தியதுடன் அவர்களின் பயபிராநதியைகுறைக்கும் முகமாகஅவர்களின் வீட்டில் தங்கிஉணவுஅருந்தியதுடன் அவர்களுக்குபாதுகாப்பாகவிளங்கினார்.
•    நியூசிலாந்துவானொலி முஸ்லீம் சோககீதங்களை இசைத்துடன்/குரான்களை ஒதி/பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேர் காணல் செய்துஒலிப்பரப்பினர.;
•    பிரதமமந்திரியும் ஏனைய மந்திரிகளும் தமதுவெளிநாட்டுபயணங்களைகுறைக்கக்கூடியஅளவுகுறைத்துநாட்டிலிருந்துபாதிக்கப்பட்டமக்களுக்குஅறுதல் கூறினார். அத்துடன்கிறிஸ்தவபெண் உறுப்பினர்கள் முஸ்லீம் முறைபடிமுக்காடு போட்டு முஸ்லீம் மக்களைதரிசித்துஆறுதல் கூறினர்
மேற்படி நாட்டின் மதநல்லிணக்கத்தை கீறிஸ்தவ/இந்து/பௌத/மூஸ்லீம் மக்கள் இலங்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் மதநல்லிணக்கத்தைபெயரளவில் அல்லாது செயல் அளவில் காண்பிப்போம்.

திரு.சின்கிளேயர் பீற்றர்.
மத/சமூக/நல்லிணக்க குழு.
மன்னார்.


மதநல்லிணக்கத்தை நியூசிலாந்து நாட்டிடமிருந்து கற்றுக்கொள்வோம். Reviewed by Author on March 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.