அண்மைய செய்திகள்

recent
-

பக்தர்கள் வெள்ளத்தில் பழநி பங்குனித் தேரோட்டம்!


பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியைத் தரிசனம்செய்தனர்.

மார்ச் 15-ம் தேதி, பழநி திரு ஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திர விழா. அன்று முதல் பழநி, பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கத்தொடங்கியது. நேற்று வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமிக்குத் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கோயில் இணை ஆணையர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேர் கிளம்பிய பிறகு வந்த அமைச்சரின் கார், தேருக்கு முன்பாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி, அவர் தேரோட்டத்தில் கலந்துகொண்டார். இது, பக்தர்களிடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியது.

நான்கு ரதவீதிகளிலும் பக்தர்களின் அரோகரா...அரோகரா கோஷத்துடன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விதவிதமான காவடியுடன் பக்தர்கள் ஆடிப்பாடி மலையேறினார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பழநி பங்குனி உத்திர விழா, வரும் 24-ம் தேதியுடன் நிறைவடையும்.

பக்தர்கள் வெள்ளத்தில் பழநி பங்குனித் தேரோட்டம்! Reviewed by Author on March 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.