அண்மைய செய்திகள்

recent
-

சாதனை வெற்றி -பரபரப்பான சூழலில் இஸ்ரேலின் பிரதமராகும் பெஞ்சனின் நெதன்யாகு!


இஸ்ரேலில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று 5வது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக உள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நாட்டில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் புளூ மற்றும் வெள்ளைக் கூட்டணி மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எனினும், நெதன்யாகுவின் கட்சிக்கு வலது சாரிகளும், மதம் சார்ந்த பின்னணி கொண்ட கட்சிகளும் ஆதரவு அளித்த நிலையில், மொத்தமுள்ள 120 இடங்களில் 65 இடங்களில் நெதன்யாகுவின் லுகுட் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளன.


இதன்மூலம் பெஞ்சமின் பிரதமராக பதவியேற்க உள்ளார். அதிலும் அவர் 5வது முறையாக பதவி ஏற்பதால், இஸ்ரேலின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில் வெற்றி பெற்றது குறித்து நெதன்யாகு கூறுகையில், ‘இது வலதுசாரிகளின் அரசு தான். ஆனால் நான் தான் பிரதமராக இருக்கப் போகிறேன். நான் அனைத்து மத மக்களின் பிரதமராக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.
சாதனை வெற்றி -பரபரப்பான சூழலில் இஸ்ரேலின் பிரதமராகும் பெஞ்சனின் நெதன்யாகு! Reviewed by Author on April 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.