அண்மைய செய்திகள்

recent
-

வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஒருதலைப்பட்சமான செயற்ப்பாட்டால் மக்கள் பாதிப்பு


கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ஜெயபுரம் பகுதி மக்களின் விவசாய காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ச்சியாக வனவள திணைக்களமானது தொடர்ச்சியாக இடையூறு விளைவிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

கிளிநொச்சி ஜெயபுர மக்கள் 1983 ஆண்டு குறித்த பகுதியில் குடியேற்றப்பட்ட பொது அவர்களுடைய வாழ்வாதர செயற்பாடுகளுக்காக அரச காணிகள் வயல் நிலங்களாக வழங்கப்பட்டது சில காலங்கள் காணிகளை துப்பரவு செய்து பயிற்செய்கைகளை மேற்கொண்ட போதும் யுத்தம் காரணமாக 300 க்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்தியா நோக்கி இடம் பெயர்ந்த காரணத்தினால் தொடர்ச்சியாக பாரியளவிலான அக் காணியில் பயிர்செய்கை செய்ய முடியாத நிலையில் குறித்த காணிகள் பராமரிப்பு இன்றி விடப்பட்டன அதே நேரத்தில் 2008 ஆம் 2009 ஆண்டுகளில் இடம் பெற்ற இறுதி யுத்ததின் போது மீண்டும் அப்பகுதியில் இருந்த அனைத்து மக்களும் இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாமில் தங்சம் அடைந்தனர்

அதன் பின்னர் 2010 ஆண்டு யுத்தம் முடிவுற்ற நிலையில் மீண்டும் குறித்த மக்கள் ஜெயபுரம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டனர் அதன் பின்னர் விவசாய நடவடிகைகளுக்காக அரசங்கத்தினால் வழங்க்கப்பட காணிக்களை துப்பரவு செய்வதற்கு முற்பட்ட போது குறித்த காணி அமைந்த பகுதிகளில் கண்ணி வெடிகள் காணப்படுவதனால் குறித்த காணிகளை வழங்க முடியாது என இராணுவம் தெரிவித்தை அடுத்து மக்கள் அக்காணிகள் துப்பரவு செய்யும் பணிகளை நிறுத்தியிருந்தனர்

அதன் பின்னர் கண்ணி வெடிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு காணிகள் அனைத்து பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது

இதனை அடுத்து கடந்த வருடம் மீள் குடியேற்றம் மற்றும் புணர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சர் சுவாமிநாதன் அவர்களால் குறித்த காணிகள் அனைத்தும் துப்பரவு செய்வதற்காக 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இடம் பெற்ற நிலையில் வணவள திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டதுடன் குறித்த காணியானாது வனவள திணைக்களத்தின் எல்லைக்குள் காணப்படுவதாகவும் எனவே குறித்த காணியை சுத்தப்படுத்தவோ விவசாய நடவடிக்கைகளுக்காகவோ பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது

இதனை அடுத்து தங்களுக்கு விவசாய செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்ட குறித்த காணிகளில் தங்களால் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வணவள திணைக்களம் இடையூறாக இருப்பதாகவும் எனவே குறித்த காணிகளை தமக்கு பெற்று தர கோரி
மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் உட்பட்ட பல்வேறு அரச தரப்பினறுக்கு மகஜர்கல் கோரிக்கை அடங்கிய கடிதங்களை வழங்கிவைத்துள்ளனர்

இருப்பினும் தற்போது குறித்த மக்களுக்கு சொந்த மான காணிகளில் வணவள திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுடன் வேறுபிரதேச மக்கள் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

எனவே ஒரு தலை பட்சமாக வனவள திணைக்களம் நடந்து கொள்வதாகவும் தங்களுக்கு உரிய காணிகளை விரைவில் பெற்று தருமாறும் ஜெயபுர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அதே நேரத்தில் குறித்த மக்களின் காணிகள் வழங்கும் விடயத்தில் அரச திணைக்களங்கள் விரைவில் நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பிராந்திய அலுவலகத்தில் ஜெயபுர மக்கள் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ள்மையும் குறிப்பிடத்தக்கது.







வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஒருதலைப்பட்சமான செயற்ப்பாட்டால் மக்கள் பாதிப்பு Reviewed by Author on April 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.