அண்மைய செய்திகள்

recent
-

ஒவ்வொருவரையும் பாதுகாப்பதும் நல்வழிப்படுத்துவதும் அரசினதும் சமயங்களினதும் தலையாய கடமையாகும். மெதடிஸ்த திருச்சபை குருமுதல்வர் அருட்பணி S.S.ரெரன்ஸ்.

நடந்து முடிந்த இக்கொடூர தாக்குதல்கள் கிறிஸ்தவர்களை இலக்குவைத்து
கிறிஸ்தவ ஆலயங்களுக்குள்ளே நடத்தப்பட்டமையானது மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு மக்களையும் ஆலயங்களையும் அழிக்கின்றவகையில் தற்கொலை குண்டுதாரிகளால் நடாத்தப்பட்டிருப்பதன் மூலம் இக்கொடூரத்தை நிகழ்த்தியவர்களின் குறிக்கோள் என்னவென்பது நன்கு புலனாகிறது.

ஒருநாட்டுக்குள் வாழும் மானிடர்கள் பல்வேறுபட்ட சமயங்களை பின்பற்றினாலும் அவர்கள் அனைவரும் அந்நாட்டின் மாண்புக்குரிய பிரஜைகளாவார். எனவே அவர்களை பாதுகாப்பதும் நல்வழிப்படுத்துவதும் அரசினதும் ஒவ்வொரு சமயங்களினதும் தலையாய கடமையாகும் என வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை மெதடிஸ்த திருச்சபை குருமுதல்வர் அருட்பணி எஸ்.எஸ்.ரெரன்ஸ் இவ்வாறு தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினம் அன்று நாட்டில் ஏற்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பாக வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை மெதடிஸ்த திருச்சபை குருமுதல்வர் அருட்பணி எஸ்.எஸ்.ரெரன்ஸ் விடுத்திருக்கும் தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது.

இந்நாட்டில் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய மானிடப்பேரழிவு
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறைமகன் இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்புத்திருநாள்
வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்
விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் போன்றோரை இலக்குவைத்து மிகவும் கொடூரமான மிலேச்சத்தனமான கொலைவெறித்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் நீர்கொழும்பு புனித
செபஸ்தியார் ஆலயம் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் போன்றவற்றில் வழிபட்ட மக்களை இலக்குவைத்தும் மற்றும் மூன்று விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் மீதும் குண்டுத்தாக்குதல்களை நடாத்தி அப்பாவி பொதுமக்கள் சிறுவர்களை கோரமாக படுகொலை செய்தமையை வடக்கு கிழக்கு அனைத்து மக்களின் சார்பிலும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையாக ஆழ்ந்த வேதனையும் அதிர்சியும் அடைவதோடு எமது வன்மையான கண்டனத்தினையும் தெரிவித்து நிற்கின்றோம்.

 இத்தகைய அடாவடித்தன தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோருகின்றோம். தங்களது அருமையான உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவர்களின் ஆறாத் துயரில் நாமும் பங்கெடுத்து நிற்கின்றோம் அத்துடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றோம். மீண்டும் ஒருதடவை இவ்வாறான கொடூரமான கொலைவெறித்தாக்குதல்கள் மூலம் அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் காவுகொள்ளப்படாமல் இருக்க பொருத்தமான
சூழலை உருவாக்கி அனைத்து மக்களின் வாழ்வுக்காக செயற்பட மானிடநேயம் மற்றும் நீதிக்காக செயற்படும் அனைத்து தரப்பினரையும் கோரிநிற்கின்றோம். அரசு இது தொடர்பான ஆக்கபூர்வமான, நீதியான முடிவை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

நடந்து முடிந்த இக்கொடூர தாக்குதல்கள் கிறிஸ்தவர்களை இலக்குவைத்து
கிறிஸ்தவ ஆலயங்களுக்குள்ளே நடத்தப்பட்டமையானது மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு மக்களையும் ஆலயங்களையும் அழிக்கின்றவகையில் தற்கொலை குண்டுதாரிகளால் நடாத்தப்பட்டிருப்பதன் மூலம் இக்கொடூரத்தை நிகழ்த்தியவர்களின் குறிக்கோள் என்னவென்பது நன்கு புலனாகிறது.

 மானிடவாழ்வில் ஒவ்வொரு மானிடனும் ஒவ்வொரு சமயத்தை பின்பற்றுவது மானிட வாழ்வியலின் பொது நியதி ஒவ்வொரு மானிடரும் பின்பற்றும சமயமோ, சமய கோட்பாடோ அவரவரது வாழ்வுரிமை அவ்வாழ்வுரிமையினை மறுக்கவோ தடுக்கவோ மாற்று
சமயத்தவர்களை குறைத்து மதிப்பீடு செய்யவோ யாருக்கும் உரிமையுமில்லை சாதாரண மானிடப்பண்பும் இல்லை

எனவே ஒருநாட்டுக்குள் வாழும் மானிடர்கள் பல்வேறுபட்ட சமயங்களை
பின்பற்றினாலும் அவர்கள் அனைவரும் அந்நாட்டின் மாண்புக்குரிய
பிரஜைகளாவார். எனவே அவர்களை பாதுகாப்பதும் நல்வழிப்படுத்துவதும்
அரசினதும் ஒவ்வொரு சமயங்களினதும் தலையாய கடமையாகும்.

எனவே இத்துயர் சம்பவத்தின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு
சட்டத்தின்முன் நிறுத்தப்படுவது மாத்திரமல்ல இனி இவ்வாறானதோர் அழிவு
ஏற்படாமல் தடுப்பதும் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து முற்கூட்டியே
தகவல்கள் கிடைக்கின்றபோது உடனடியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உரிய வழிகாட்டல்களை முன்னெடுப்பது அரசினதும் தலையாய கடமையாகும் நாட்டில் அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது நீதியையும் சமாதானத்தினையும் விரும்புகின்ற அனைவரினதும் பொறுப்பாகும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க செயற்படவும் இனி ஒருபோதும்
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க செயலாற்றுவதற்கு அனைத்து சமயங்கள் மற்றும் சிவில் மானிட உரிமை செயற்பாட்டாளர்களையும் கோரி நிற்பதோடு இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையினராக தொடர்ந்தும்
நீதிக்காகவும் சமாதானத்துக்காகவும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின்
சார்பாக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என்பதை உறுதிபட தெரிவித்து
நிற்கிறோம் என வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை மெதடிஸ்த திருச்சபை
குருமுதல்வர் அருட்பணி எஸ்.எஸ்.ரெரன்ஸ் இவ்வாறு தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரையும் பாதுகாப்பதும் நல்வழிப்படுத்துவதும் அரசினதும் சமயங்களினதும் தலையாய கடமையாகும். மெதடிஸ்த திருச்சபை குருமுதல்வர் அருட்பணி S.S.ரெரன்ஸ். Reviewed by Author on April 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.