அண்மைய செய்திகள்

recent
-

வெயிற்காலங்களிலிருந்து எளிதில் தப்பிக்க வேண்டுமா....


கோடைக்காலம் வந்துவிட்டாலே எல்லோருக்கும் பெரும் அவதியாக இருக்கும். அதிக வியர்வை, அதிக சூடு காரணமாக இது நம்முடைய உடலுக்கும் அதிக வறட்சி ஏற்படுத்துகின்றது.

இதிலிருந்து விடுபடுவதற்காக பலரும் ஏசியை தேடி ஓடிக் கொண்டு உள்ளனர். இருப்பினும் இது நிரமாக தீர்வை தராது.

கோடை காலத்தை நாம் ஓரளவுக் சமாளிக்க வேண்டும் என்றால் அதற்கு தண்ணீர் தான் மிக முக்கிய தேவையாக இருக்கிறது.
கோடைக்காலங்களில் நாம் எந்த அளவிற்கு தண்ணீர் அருந்துகின்றமோ அந்த அளவிற்கு நன்மை தரும் என்று அடிக்கடி நமது பெரியோர்கள் கூறுவார்கள்.
அந்தவகையில் தண்ணீரை எந்த அளவு குடிப்பதற்கு என்று விதிகள் உண்டு. அதை பின்பற்றுவது தான் நல்லது.
அதுமட்டுமின்றி இதை தவிர கோடைகாலம் வந்துவிட்டால் வேறு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.

  • கோடை காலத்தில் பழைய சாதம் ஊற வைத்த தண்ணீரை (நீராகாரம்) இரண்டு டம்ளர் அளவுக்குக் குடியுங்கள்.
  • காலை உணவில் மாதுளை, தர்ப்பூசணி, திராட்சை, கொய்யா, பப்பாளி இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது மிக்ஸ்டாகவோ எடுத்துக் கொள்வது நல்லது.
  • இளநீர், மோர், தண்ணீர் ஏதாவது ஒன்றில் இரவு சிறிதளவு வெந்தயத்தை போட்டு ஊற வைத்துவிடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால் வெயிலால் ஏற்பட்ட சூடு உஷ்ணம் குறையும்.
  • காலை 5 மணி முதல் 7 வரை பெருங்குடல் வேலை செய்வதற்கான முக்கிய நேரம். அந்த சமயத்தில் நாம் குடிக்கும் தண்ணீர் தான் நமது குடல்களைச் சுத்தப்படுத்தி பசி உணர்வைத் தூண்டும். நல்ல ஜீரணத்துக்கு உதவி செய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.
  • கோடை காலத்தில் காலை உணவாக கம்மங்கூழ், பழைய சாதம், நீராகரம், அதோடு தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, புதினா துவையல் ஆகியவற்றை வைத்துக் கொள்வது நல்லது.
  • மதிய உணவு சாப்பிடச் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக சிறிது தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள்.
  • மதிய உணவில் சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • வாரத்தில் நான்கு நாட்களாவது மதிய உணவோடு சேர்த்து மோரை சாப்பிடுங்கள் மோரில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போட்டு மசாலா மோராகக் கூட பயன்படுத்தலாம்.
  • அசைவ உணவு சாப்பிடுகிறவர்களாக இருந்தால் அதை மதிய வேளைகளில் சாப்பிடுங்கள். ஒருவேளை இரவில் சாப்பிடுவதாக இருந்தால் எட்டு மணிக்கு முன்பாகவே சாப்பிட்டு விடுவது நல்லது.
  • அதிக மசாலாவும் காரமும் இல்லாமல் சாப்பிடுங்கள். குறிப்பாக, ஆட்டின் சாப்ஸ் என்று சொல்லப்படும் மார்பு எலும்பில் சூப் செய்து சாப்பிடுவது நல்லது. அது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
  • ஒரு வேளை மாலை நேரங்களில் பசியோ தாகமோ எடுத்தால் ஜூஸ் ஏதாவது குடித்துக் கொள்ளலாம்.
  • தண்ணீரில் சிறிது வெட்டிவேர் போட்டு ஊறவிட்டு குடிப்பது இன்னும் நல்லது. 30 லிட்டர் தண்ணீர் அளவுக்கு 3 வேர்கள் கணக்கில் போட்டாலே போதுமானது.
  • ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்ததுத் சிறிதளவு தண்ணீர் குடிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில் தாகம் எடுக்காவிட்டாலும் சிறிது குடிப்பது நல்லது.
  • கோடை காலத்தில் தினமும் தலைக்குக் குளித்துவிடுங்கள். அதேபோல் காலை,இரவு என இரண்டு வேளை குளியுங்கள். அது உடல் சூட்டைக் குறைத்தும் சமநிலைப்படுத்தும். அதேபோல் வாரம் ஒரு முறை மறக்காமல் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
  • கோடை காலத்தில் இரண்டு முறையாவது உள்ளாடைகளை மாற்றுங்கள். அதேபோன்று தூங்கச் செல்வதற்கு முன்பாக, நமது இடுப்புப் பகுதிகள் உள்ளிட்ட பிறப்புறுப்புப் பகுதிகளை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு தூங்கச் செல்வது நல்லது. அது நமது சிறுநீரகப் பகுதியைக் குளிர்ச்சிப்படுத்தும்.
  • பசும்பால் கிடைத்தால் இரவு உணவின் போதோ அல்லது உணவுக்குப் பின்னோ எடுத்துக் கொள்ளுங்கள். அது உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியைக் கொடுக்கும். அதோடு நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.

வெயிற்காலங்களிலிருந்து எளிதில் தப்பிக்க வேண்டுமா.... Reviewed by Author on April 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.