அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் -சிறப்பாக இடம் பெற்ற இளைஞர் திறன் வெளிகொணரும் நிகழ்வு-படங்கள்

வீ லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை உள்ளடக்கி சமூக ரீதியில் பொறுப்பு வாய்ந்த இளையோர் சமூகத்தை உருவாக்கி சமூக வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டளை வழங்கும் முகமாக பல்வேறு பட்ட சமூக கலாச்சார உணவு சுத்தம் சார்ந்த புதிர்களை உள்ளடக்கிய விளையாட்டு மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று மாலை 2.00 மணியளவில் மன்னார் பொது விளையட்டு அரங்கில் MANNAR ITP  முகாமையாளர் திரு.கமல் மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மன்னார் மாவட்ட தேசிய பிரதிநிதி ஜோசப் நயன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச  செயலகங்களையும் பிரதிநிதித்துவபடுத்தி இணையதளத்தின் ஊடாக பதிவு செய்த  சுமார் 22 அணிகள் கலந்து கொண்டன
  •  நகரை அண்டிய பகுதிகளை சுத்தம் செய்தல் 
  • கடற்கரையில் அடையும் வெளிநாட்டு பொருட்களை அடையாளம் காணல் பாரம் பரிய உணவுகளை அறிந்துகொள்ளல் 
  • புராதான பொருட்களை அடையாளப்படுத்தல் 
  • உடல் ரீதியாக வலுப்படுத்திக்கொள்ளல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி குறித்த விளையாட்டு நிகழ்வானது இடம் பெற்றது.

குறித்த நிகழ்வுகு சிறப்பு அழைப்பாளர்களாக SFCG நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் இலங்கைக்கான பொறுப்பதிகாரியும் கலந்து சிறப்பித்தார்

ஒட்டு மொத்தமாக இடம் பெற்ற 9 வித்தியாசப்பட்ட நிகழ்வுகளிலும் வெற்றி பெற்ற முதல் 5 அணிகளுக்கும் சான்றிதழ்களும் பணப்பரிசீல்களும் வழங்கப்பட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட 15 அணிகள் தேசிய ரீதியில் இடம் பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.
 
















மன்னார் -சிறப்பாக இடம் பெற்ற இளைஞர் திறன் வெளிகொணரும் நிகழ்வு-படங்கள் Reviewed by Author on April 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.